அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

சில தினங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு துவக்கத்திலேயே ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

பிஎம்டபிள்யூ நிறுவனம் மிக சமீபத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி அதன் 3-சீரிஸ் வரிசையில் புதிய கார் மாடலாக எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரை ரூ.69.20 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

பிஎம்டபிள்யூ 3-சீரிஸின் ஸ்போர்டியர் வெர்சனாக களமிறக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ தெரியவில்லை எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் கார் அறிமுகப்படுத்த முதல் நாளிலேயே விற்கப்பட்டு உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ள இந்த பிஎம்டபிள்யூ காரில் நிறுவனத்தின் ‘எம்' கார்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் எம்-ஸ்பெசிஃபிக் சேசிஸ் ட்யூனிங் மற்றும் எம் ஸ்போர்ட் பின்பக்க டிஃப்ரென்ஷியல் உள்ளிட்டவை எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரிலும் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

செடான் ரக காரான இதில் சிறப்பம்சங்களாக பிஎம்டபிள்யூ லேசர்லைட், பின்பக்க எம் ஸ்பாய்லர், 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சைகை கண்ட்ரோல் உடன் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட், ஹெட்ஸ்-அப் திரை மற்றும் 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரில் 3.0 லிட்டர், இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 377 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ காரான எம்340ஐ எக்ஸ்ட்ரைவ்-ஐ இந்த என்ஜின் அமைப்பின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

செயல்திறன்மிக்க என்ஜின் உடன் இந்த செடான் காரின் உட்புறத்தில் 3-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கேபினை சுற்றிலும் விளக்குகளுடன் கார் ஆர்வலர் தொகுப்பு, ரேஸர்களின் தொகுப்பு மற்றும் மோட்டார்ஸ்போர்ட் தொகுப்பு முதலிய ஆக்ஸஸரீ தொகுப்புகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை மெருக்கேற்றி கொள்ளலாம்.

அறிமுகமான முதல் நாளிலேயேவா!! பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கு செம்ம ரெஸ்பான்ஸ்...

இந்த பிஎம்டபிள்யூ காருக்கான முன்பதிவு கடந்த மார்ச் 5ஆம் தேதி துவங்கப்பட்டது. ரூ.1 லட்சம் என்ற முன் தொகை உடன் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்பதிவுகளில் முதல் 40 வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தால் அங்கரீக்கப்பட்ட பயிற்சியாளர்களின் மூலம் ரேஸ் ட்ராக்கில் இந்த செயல்திறன்மிக்க காரை சரியாக உபயோகப்படுத்துவது எப்படி என்ற பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்திருந்தது.

Most Read Articles

English summary
BMW M340i xDrive sold out in India within a day of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X