பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவு மீண்டும் துவங்கியது!! வெறும் 50 யூனிட்கள் தானாம்!
பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரின் இரண்டாவது தொகுப்பிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் மலிவான சொகுசு செடான் கார் சந்தையில் பிஎம்டபிள்யூவின் 3 சீரிஸ் கார்கள் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் அதிகரித்துவரும் சந்தைப்போட்டியை கருத்தில் கொண்டு 3 சீரிஸ் மாடலின் அதிக செயல்திறன்மிக்க வெர்சன் இந்தியாவில் களமிறக்கப்பட்டது.

எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இதுதான் இந்தியாவில் பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்தியுள்ள முதல் செயல்திறன்மிக்க எம் வரிசை காராக பார்க்கப்படுகிறது. இதனாலேயே அறிமுகத்திற்கு முன்பே இந்த பிஎம்டபிள்யூ காருக்கு எதிர்பார்ப்பு எகிறியது.

கடந்த மார்ச் 10ஆம் தேதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்340ஐ எக்ஸ்ட்ரைவின் முன்பதிவுகள், முதல் தொகுப்பு முழுவதுமாக விற்று தீர்க்கப்பட்டதால் அடுத்த சில நாட்களேயே நிறுத்தி கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தான் தற்போது இந்த காருக்கான முன்பதிவுகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

இரண்டாவது தொகுப்பாக வெறும் 50 எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த இரண்டாவது தொகுப்பில் புதியதாக கருப்பு நிறத்தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்340ஐ எக்ஸ்ட்ரைவின் இரண்டாவது தொகுப்பை முன்பதிவு செய்பவர்களுக்கு கார் டெலிவிரி செய்யப்படுவது வருகிற ஆக்ஸட் அல்லது செப்டம்பரில் துவங்கப்படலாம். செயல்திறன்மிக்க வெர்சன் என்பதால் இந்த மாடல் பிரத்யேகமான எம்-தொகுப்பு பாகங்களை பெறுகிறது.

எம்-சேசிஸ் ட்யுனிங், அனைத்து-சக்கர ட்ரைவ் மற்றும் எம் ஸ்போர்ட் பின் டிஃப்ரென்ஷியல் உள்ளிட்டவை இந்த எம் தொகுப்பில் அடங்குகின்றன. இவற்றுடன் ஆர்வலர் தொகுப்பு, ரேஸர் தொகுப்பு மற்றும் மோட்டார்ஸ்போர்ட் தொகுப்பு என்ற மூன்று விதமான ஆக்ஸஸரீ தொகுப்புகளும் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை கார் வாங்கும்போது வாடிக்கையாளர் தேர்வு செய்ய முடியும். எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரில் இரட்டை-டர்போ, 3.0 லிட்டர், இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,500- 6,500 ஆர்பிஎம்-இல் 377 பிஎச்பி மற்றும் 1,850- 5,000 ஆர்பிஎம்-இல் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் இணைக்கப்படுகின்ற 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கும். இந்த செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








