தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

பிரபல ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் சில மாடல்களை தொடுத்திரை இல்லாமல் விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 2020ஆம் வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவிற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஊரடங்கு உத்தரவுகளை விதித்தன. இதன் விளைவாக பல நிறுவனங்கள் சரிவை கண்டதை பார்த்திருந்தோம்.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

சரி இந்த 2021ஆம் வருடத்திலாவது நன்றாக இருந்ததா என கேட்டால், இதற்கு கடந்த வருடமே பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, இந்த ஆண்டின் மத்தியில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை பரவலினால் தொழிற்சாலைகள் & டீலர்ஷிப் ஷோரூம்கள் மாநிலங்களை பொறுத்து இந்திய நகரங்கள் பலவற்றில் மூடப்பட்டன. அப்போதே குறைக்கடத்திகளுக்கான தேவை அதிகரிக்க துவங்கிவிட்டது.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

அது தற்போது உலகளாவிய தேவையாக மாறி நிற்கிறது. இதன் காரணமாக மாருதி சுஸுகி போன்ற முன்னணி இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் கூட வாகனங்களை தயாரிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. இந்த வகையில், பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பிஎம்டபிள்யூ அதன் சில மாடல்களை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பிற்கான திரை இல்லாமல் விற்பனை செய்யவுள்ளது.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

இந்த செய்தியினை உறுதிப்படுத்தியுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுகுறித்து எட்மண்ட்ஸ் என்ற செய்திதளம் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்துறை முழுவதுமாக வாகன உற்பத்தி விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் விளைவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளது.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

இருப்பினும் இவ்வாறு தொடுத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பணம் தள்ளுபடி கிடைக்குமாம். அதாவது '6UY' என்ற எண் உடன் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியில் லேபிள் ஒட்டப்பட்டு தனியாக அடையாளப்படுத்தப்பட உள்ள இத்தகைய பிஎம்டபிள்யூ கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 500 அமெரிக்கன் டாலர்கள் வரையில் சேமிக்கலாம்.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

இந்திய ரூபாயில் ரூ.37 ஆயிரம். தொடுத்திரை இல்லாவிடினும் 6யுஒய் எண் உடன் விற்கப்படும் இந்த பிஎம்டபிள்யூ கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே போன்ற இணைப்பு கார் தொழிற்நுட்பங்களை எதிர்பார்க்கலாம். இந்த இணைப்பு கார் அமைப்புகளை குரல் கட்டளையின் மூலமாகவோ அல்லது பிஎம்டபிள்யூவின் நம்பகமான ஐ-ட்ரைவ் சிஸ்டத்தின் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

இதனால் காரின் உட்புற கேபினை வெறும் குரலின் மூலமாகவே கண்ட்ரோல் செய்யலாம். மற்ற பிஎம்டபிள்யூ கார் பயன்பாட்டாளர்களை போல் பொத்தான்களை அழுத்தி கொண்டும், திரையினை தடவிக்கொண்டும் இருக்க தேவை இருக்காது. தொடுத்திரைகள் நமக்கு சற்று புதியவை தான். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு தொடுத்திரை உடன் இந்திய சாலைகளில் சென்ற கார்கள் என்று பார்த்தால் மிகவும் சில மாடல்கள் மட்டுமே இருக்கும்.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

பிஎம்டபிள்யூ பிராண்டிலேயே எத்தனை கார்கள் 2010 காலத்தில் நம் நாட்டில் தொடுத்திரை உடன் விற்பனை செய்யப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு பழக்கப்பட்டவை. ஆதலால் எப்போதும் தொடுத்திரைகளை பயன்படுத்தி கொண்டு இருந்தவர்களுக்கு இந்த நீக்கம் சற்று மாறுதல்களை ஏற்படுத்தும்.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

குரல் கட்டுப்பாடுகளின் மூலம் இன்ஃபோடெயின்மெண்ட்டின் இணைப்பு கார் வசதிகளை பெறலாம் என்றாலும், காரின் கேபினுக்குள் தொடுத்திரை இருந்தாலே அது தனி அழகு தான். அதிலும் பிஎம்டபிள்யூ போன்ற லக்சரி கார் பிராண்ட்களின் தயாரிப்புகளில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

இதனால் குறைக்கடத்தி பற்றாக்குறைகளினால் ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக இழப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் எவ்வாறு சமாளிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பணம் தள்ளுபடி உடன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை இல்லாமல் கார்களை வழங்க முடிவெடுத்தாலும், இந்த நடவடிக்கை பிராண்டின் தரத்தை பாதிக்கும் என்பதை நிச்சயமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் மறக்காது.

தலை விரித்தாடும் குறைக்கடத்திகளுக்கான தேவை, பிஎம்டபிள்யூ கார்களில் இருந்து நீக்கப்படும் முக்கிய அம்சம்!!

இப்பொழுதெல்லாம் சிறிய கார்களில் கூட தொடுத்திரை அம்சம் வழங்கப்படுவதால், குறிப்பாக நம் இந்திய வாடிக்கையாளர்கள் தொடுத்திரை இல்லாத கார்களை பேச்சிற்கு கூட ஓர் கண்ணோட்டம் பார்ப்பதில்லை. அப்படி இருக்க, குறைந்தது ரூ.30- 40 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை தொடுத்திரை வசதி இல்லாமல் வாங்க எத்தனை பேர் முன்வருவார்கள் என்பதை தற்போதைக்கு கணிக்க முடியவில்லை.

எந்தெந்த பிஎம்டபிள்யூ கார்களை தொடுத்திரை இல்லாமல் பெறலாம் என்பதையும் இன்னும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. அதேபோல் முதலாவதாக இந்த தள்ளுபடி வசதி எந்த நாட்டு சந்தையில் அமலுக்கு கொண்டுவரப்படும் என்பதும் தெரியவில்லை. இந்திய சந்தையில் அமலுக்குவர சில மாதங்கள் ஆகலாம்.

Most Read Articles

English summary
BMW Deletes Touchscreen Infotainment On Some Models.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X