ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி டார்க் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

தனித்துவமான பல சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பல முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி மாடலாக எக்ஸ்-7 கார் விற்பனையில் உள்ளது. ஆளுமையானத் தோற்றத்துடன் கோடீஸ்வரர்களை இந்த சொகுசு எஸ்யூவி கார் வசீகரித்து வருகிறது.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த நிலையில், தனித்துவத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட எக்ஸ்-7 எஸ்யூவியை கடந்த ஆண்டு உலக அளவில் பிஎம்டபிள்யூ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 டார்க் ஷேடோ எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் குறிப்பிடப்படுகிறது. மொத்தமாக 500 யூனிட்டுகள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்படும். இந்த விசேஷ மாடல் இப்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த சொகுசு எஸ்யூவி கார் மெட்டாலிக் ப்ராஸன் ஆர்டிக் க்ரே என்ற வண்ணத் தேர்வில் வந்துள்ளது. பல இடங்களில் கருப்பு வண்ண பாகங்களுடன் அட்டகாசமாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த காரின் க்ரில் அமைப்பு, ஏர்டேம் பகுதி, 22 அங்குல சக்கரங்கள், சி பில்லர்கள் ஆகியவை விசேஷ கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், சாதாரண எக்ஸ்-7 எஸ்யூவியிலிருந்து இது அதிக தனித்துவமாக தோற்றமளிக்கிறது.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த காரில் உட்புறத்தில் நைட் புளூ மற்றும் பிளாக் ஆகிய வண்ணங்களிலான டியூவல் டோன் இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இறுக்கிறது. நீல வண்ண பாகங்கள் மூலமாக இதன் இன்டீரியர் கவர்ச்சி கூட்டப்பட்டு இருக்கிறது.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த காரில் பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் டைமண்ட் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பின்புற பயணிகளுக்கான டிவி திரைகள், பனோரமிக் சன்ரூஃப், மசாஜ் வசதி கொண்ட முன் இருக்கைகள், 5 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 டார்க் ஷேடோ எடிசன் மாடலில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 394 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டிவிடும்.

ரொம்ப ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 டார்க் ஷேடோ எடிசன் மாடலுக்கு ரூ.2.02 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எம் ஸ்போர்ட் பேக்கேஜ் கொண்ட இந்த கார் சாதாரண மாடலைவிட விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
BMW has launched X7 Dark Shadow Edition in India and priced at Rs 2.02 crore (Ex-showroom).
Story first published: Monday, May 31, 2021, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X