சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

பிரபல இந்தி நடிகர் ஒருவர் மிக சமீபத்தில் ரூ. 1.63 கோடி மதிப்புள்ள மஸராட்டி லெவண்டே எனும் சொகுசு காரை வாங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்ட காரை அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் அவர், என்ன காரை வாங்கியிருக்கின்றார் என்பது குறித்த தகவலைக் கீழே காணலாம்.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

நடிகர்கள் கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து வாகனங்களை வாங்குவது இந்தியாவில் வாடிக்கையான நிகழ்வான மாறிவிட்டது. இருப்பினும், பல கோடி மக்கள் ஒரு வேலை உணவிற்கே அல்லல்பட்டு வரும் சூழ்நிலை இந்தியாவில் நிலவி வருவதால் நடிகர்களின் ஆடம்பர கொள்முதல் எப்போதும் தலைப்பு செய்தியாக மாறிவிடுகின்றன.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

அந்தவகையில், நடிகர் அர்ஜூன் கபூர் ரூ. 1 கோடி செலவு செய்து சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் எஸ்யூவி ரக காரையே நடிகர் தற்போது வாங்கியிருக்கின்றார்.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

இது ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடு திறன் கொண்ட எஸ்யூவி ரக காராகும். பேன்ஜியா பச்சை நிறத்திலான காரையே நடிகர் தற்போது வாங்கியிருக்கின்றார். இக்காருக்கு எம்எச் 02 எஃப்பி 3030 (MH02FP3030) என்ற பேன்சி எண்ணையும் அவர் வாங்கியிருக்கின்றார். இதற்காகவும் அவர் சில லட்சங்களைச் செலவு செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

நடிகர் அர்ஜூனின் இந்த சமீபத்திய கொள்முதல் பற்றிய தகவலையும், புகைப்படத்தையும் பிங்க்வில்லா எனும் தளம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே நடிகரின் விலையுயர்ந்த கார்குறித்த தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

அர்ஜூன் கபூர் மிக சமீபத்திலேயே மசராட்டி லெவண்டே எனும் காரை வங்கியிருந்தார். தனது 32ம் பிறந்தநாளை முன்னிட்டு தனக்கு தானே இக்காரை பரிசளித்துக் கொண்டார் அர்ஜூன். இக்கார் இந்தியாவில் ரூ. 1.63 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

இதுமட்டுமின்றி ஆடி க்யூ5 சொகுசு கார் மற்றும் ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி ஆகிய கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது கராஜையும், தனது பயணத்தையும் அலங்கரிக்கும் நோக்கில் புதுமுக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை அவர் வாங்கியிருக்கின்றார்.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகமே டிஃபெண்டர் கார். இக்காருக்கு இந்திய திரைபிரபலங்கள் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அண்மையில்கூட பிரபல பஞ்சாபி பாடகர் சதிந்தர் சர்தாஜ் இக்காரை வாங்கியிருந்தார். இந்த நிலையிலேயே டிஃபெண்டர் கார்களைப் பயன்படுத்தி வரும் பாலிவுட் திரையுலகினரின் வரிசையில் அர்ஜூன் கபூர் இணைந்துள்ளார்.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

டிஃபெண்டர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வழங்கப்பட்டு வருகின்றது. இது அதிகபட்சமாக 292 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோன்று, 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550என்எம் டார்க்கை வெளியேற்றக்கூடியது.

சொகுசு கார்களை வாங்கு குவிக்கும் நடிகர்! யார் அவர் என்பதைவிட வாங்கியிருக்கும் காரின் விலை ஆளையே மிரட்டுது!!

தொடர்ந்து, 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் டிஃபெண்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 296 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இந்த மூன்று விதமான எஞ்ஜின் தேர்விலேயே இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BollyWood Actor Arjun Kapoor Buys Brand New Land Rover Defender SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X