Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 2 hrs ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!
- Finance
கையை நீட்டினால் போதும்.. அமேசானின் புதிய பேமெண்ட் முறை..!
- Lifestyle
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரை டெஸ்ட் டிரைவ் செய்த பிரபல நடிகர்... இந்த காரோட விலை மயக்கத்தையே வர வைக்குது!
மிக மிக அதிக விலைக் கொண்ட சொகுசு காரை பிரபல நடிகர் ஒருவர் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்திருக்கின்றார். அவர் யார், அக்காரின் விலை என்ன?, மற்றும் காரின் சொகுசு வசதிகள்குறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிக விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார் மாடல்களில் எக்ஸ்7-ம் ஒன்று. இந்த கார் ரூ. 93 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த காரை பிரபல நடிகர் ஒருவர் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல மடங்கு அதிக விலைக் கொண்ட இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரை வாங்கும் நோக்கில் அந்த நடிகர் டெஸ்ட் டிரைவ் செய்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த நடிகர் யார் என்று தானே கேக்குறீங்க, பிரபல பாலிவுட் நடிகரான ஷாகிஜ் கபூர்-தான் அவர்.

இவரே விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை டெஸ்ட் டிரைவ் செய்தவர் ஆவார். இவர் காரைடெஸ்ட் டிரைவ் செய்வதுகுறித்த புகைப்படங்களை பாலிவுட் ஹங்காமா தளம் வெளியிட்டிருக்கின்றது. ஷாகித் கபூரிடத்தில் ஏற்கனவே பல விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி எஸ்400, ரேஞ்ஜ் ரோவர் வோக், ஜாகுவார் எக்ஸ்கேஆர்-எஸ் கார்கள் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஃபேட் யமஹா எம்டி 01 பைக் என பல்வேறு விலையுயர்ந்த வாகனங்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே தனது வாகன நிறுத்துமிடத்தை அலங்கரிக்கும் விதமாகவும், வரும்கால பயணங்களை சிறப்பானதாக மாற்றும் நோக்கிலும் புதிய சொகுசு கார் வாங்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றார் சாஹித் கபூர்.

இதனடிப்படையிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக அதிக திறன் வாய்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட வாகனத்தை அவர் டெஸ்ட் டிரைவ் செய்திருக்கின்றார். இந்த லக்சூரி எஸ்யூவி கார் நான்கு விதமான வேரியண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

டிபிஇ, டிபிஇ சிக்னேச்சர், 40ஐ எம் ஸ்போர்ட் மற்றும் எம்50டி ஆகிய வேரியண்டுகளிலேயே அது கிடைக்கின்றது. இதில், எம்50டி என்பதே உயர்நிலை வேரியண்டாகும். இக்கார் ரூ. 1.65 கோடிகள் எனும் விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இன்னும் சில லட்சங்களுடன் விற்பனைக் கிடைக்கும்.

இதில் டிபிஇ மற்றும் டிபிஇ சிக்னேச்சர் வேரியண்டுகள் 3.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 265 பிஎஸ் மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. தொடர்ந்து, 40ஐ எம் ஸ்போர்ட் கார் 3.0 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினிலும், எம்50 டி 3.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த அனைத்து எஞ்ஜின்களுமே பேட்டில் ஷிஃப்டர் வசதிக் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தொடர்ந்து, இந்த சொகுசு காரில் ஈகோ ப்ரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் அடாப்டிவ் என நான்கு விதமான ரைடிங் மோட்களும் வழங்கப்படுகின்றன.

Source: Bollywood Hungama
இதுமட்டுமின்றி 5நிலை க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் சாஃப்ட் க்ளோஸ் வசதிக் கொண்ட கதவுகள் என எக்கச்க்க லக்சூரி வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற காரணத்தினாலயே திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை இக்கார் அதிகளவில் கவர்ந்து வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஷாகித் கபூரின் டெஸ்ட் டிரைவ் சம்பவம் அமைந்திருக்கின்றது.