கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

இனி கால் டாக்சிகளை அழைக்க மாட்டேன் புதிய காரை வாங்கிட்டேன் என பிரபல நடிகர் ஒருவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவர் யார்?, அந்த காரின் விலை எவ்வளவு என்பது?, உள்ளிட்ட முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

ஜீப் நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் காம்பஸ் எஸ்யூவி-யும் ஒன்று. இந்த காரை அண்மையில்தான் புதுப்பிக்கப்பட்ட மாடலாக இந்திய சந்தையில் தயாரிப்பு நிறுவனம் களமிறக்கியது. இக்காருக்கு இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என பல தரப்பினரிடையே நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

இத்தகைய சிறப்புமிக்க காரையே பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிரடி மற்றும் மிக சிறந்த நடிப்பிற்கு பெயர்போன நடிகரான விஜய் வர்மா, இவரே விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கியவர் ஆவார்.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியதாவு, "காரை திருடியது, பழு பார்த்தது மற்றும் விற்பனைச் செய்தது போன்ற காட்சிகளில் நடித்ததற்கு பின்னர் தற்போது புதிய காரை சொந்தமாக்கியுள்ளேன். எனது விருப்பமான காருக்கு அனைவரும் ஹலோ சொல்லுங்க" என பதிவிட்டுள்ளார்.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

இத்துடன், "குறிப்பு - புகைப்படத்திற்காக மட்டுமே எனு மாஸ்க்கை கழட்டினேன். என்னுடைய கைகளை நல்ல நறுமனம் மிக்க கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்திருக்கின்றேன்" என்றும் அவர் கூறியிருக்கின்றார். ஒட்டுமொத்த உலகையே கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து வருகின்றது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

இதன் காரணமாக மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என கூறப்பட்டு வருகின்றது. இந்தியாவில் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிபவர்கள்மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே மாஸ்க் இல்லாததுகுறித்து நடிகர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

இந்த பதிவுடன் சேர்த்து கார் குறித்த சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். அந்த புகைப்படத்தில் கடைசியாகவே ஓர் விநோத படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அது, இனி கால் டாக்சிகளுக்கு குட் பை சொல்லப்படும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கின்றது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

இது, முன்னதாக நடிகர் கால் டாக்சியில் பயணித்து வந்ததையும், இனி கால் டாக்சிகளை அழைப்பதற்கான அவசியம் விஜய் வர்மாவிற்கு இருக்காது என்பதையும் தெளிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. திரை நட்சத்திரங்கள் பவர் விஜய் வர்மாவின் பதிவின்கீழ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

புதுப்பிக்கப்பட்ட ஜீப் காம்பஸ் கார் இந்தியாவில் ரூ. 16.99 லட்சம் தொடங்கி ரூ. 28.29 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதில் எந்த விலையுள்ள காம்பஸ் காரை அவர் வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய துள்ளியமான தகவல் கிடைக்கவில்லை.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

ஜீப் காம்பஸ் காரில் யுகன்னெக்ட் தொழில்நுட்பம் அடங்கிய 10.1 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிருதுவமான தொடும் உணர்வும் கொண்ட லெதர் உறை டேஷ்போர்டு, சாஃப்டான இருக்கைகள், எளிமையாகக் கையாளும் வசதிகள் கொண்ட ஸ்டியரிங் வீல் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்காரில் இருக்கின்றன.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்...

ஜீப் காம்பஸ் காரில் 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி, டீசல் எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு தானியங்கி ஆகிய விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actor Vijay Varma Buys Brand New Jeep Compass. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X