ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார்கள் இருக்குமா தெரியல! லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த காமெடி நடிகர்கள் சிலர் ஹீரோக்களை மிஞ்சுமளவிற்கு அதிக விலைக் கொண்ட சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர். யார் யார் என்னென்ன கார்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

திரையுலகில் காமெடியன்களாக நடிக்கும் பலர் நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களையே மிஞ்சுமளவிற்கு செல்வந்தர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை மட்டுமில்லைங்க பயணங்களும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. அதாவது, தங்களின் பயணங்களுக்காக காமெடி நடிகர்கள் சிலர் பயன்படுத்தும் கார்களின் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

அந்தவகையில், அதிக விலைக் கொண்ட சொகுசு கார்களைப் பயன்படுத்தும் காமெடி நடிகர்களைப் பற்றியும், அவர்கள் பயன்படுத்தும் கார்கள் பற்றியுமே இப்பதிவில் நாம் காண இருக்கின்றோம். பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நான்கு முக்கிய காமெடி நடிகர்கள் பற்றியதே இப்பதிவு என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

ஜானி லிவர்:

நாம் முதலில் ஜானி லீவர் பயன்படுத்தும் சொகுசு கார்கள் பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். இவர் ஓர் காமெடி நடிகர் என்றாலும் இவருக்கென தனி ரசிகப் பட்டாளமே இருக்கின்றது. ஆகையால், இவருக்கென எப்போதும் சந்தையில் தனி மாரியாதை உண்டு. இவர் பல்வேறு சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றார்.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

அதில் ஒன்று ஆடி ஏ4 சொகுசு கார். இக்கார் அதிகபட்சமாக மணிக்கு 237கிமீ பயணிக்கும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ220டி எனும் லக்சூரி காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். 2.0 லிட்டர் எஞ்ஜின் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக 194 எச்பி திறனை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 243கிமீ ஆகும்.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

இதுதவிர ஹோண்டா அக்கார்டு காரையும் ஜானி லிவர் பயன்படுத்தி வருகின்றார். 1.5 லிட்டர் எஞ்ஜினுடைய இக்கார் அதிகபட்சமாக 156எச்பியை வெளிப்படுத்தும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 212கிமீ ஆகும். இதில், இவர் பயன்படுத்தி வரும் ஆடி காரின் விலை ரூ. 45.86 லட்சம் ஆகும். இதைவிட அதிக விலைக் கொண்ட காராக இவர் பயன்படுத்தும் பென்ஸ் இருக்கின்றது. இதன் விலை ரூ. 60.16 லட்சங்கள் ஆகும். ஹோண்டா அக்கார்டு காரின் விலை ரூ. 38.29 லட்சம் ஆகும்.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

கோவிந்தா

பாலிவுட் திரையுலகின் மற்றுமொரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் கோவிந்தாவும் ஒருவர். இவரிடத்திலும் பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. நகைச்சுவை மட்டுமின்றி நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கின்றார் கோவிந்தா. ஆகையால், இவரின் நடனத்திற்கென தனி ரசிகப் பட்டாளமே பாலிவுட்டிடல் இருந்து வருகின்றது.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

Image Courtesy: Filmfare

இவர், மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றார். இதுதவிர மிட்சுபிஷி லேன்ஸர் மற்றும் ஃபோர்டு என்டீயோவர் ஆகிய கார்களையும் பயன்படுத்தி வருகின்றார். இவை மூன்றில் பென்ஸ் காரே இவர் பயன்படுத்தும் அதிக விலைக் கொண்ட காராகும். இக்கார் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

ராஜ்பால் யாதவ்

பாலிவுட் திரையுலகில் அதிகம் சொகுசு கார்களைப் பயன்படுத்தக்கூடிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் இவரும் முதன்மையானவர் ஆவார். இவரிடத்தில் பிஎம்டபிள்யூ 5 செரீஸ் கார்கூட பயன்பாட்டில் இருப்பதாக பத்ரிகா எனும் செய்தி தளம் அண்மையில் தகவல் வெளியிட்டது. இக்கார் இந்தியாவில் ரூ. 66 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

Image Courtesy: Patrika

இத்துடன், ஹோண்டா அக்கார்டு காரையும் ராஜ்பால் யாதவ் பயன்படுத்தி வருகின்றார். வழக்கமான பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் இந்த கார் ரூ. 44 லட்சத்திற்கும் அதிகமான விலைக் கொண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் 2.0 லிட்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 143 எச்பி திறனை வெளியேற்றும்.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

கபிள் ஷர்மா

பாலிவுட் திரையுலகில் மிரள வைக்கம் வகையில் சொகுசு கார்களைப் பயன்படுத்தக்கூடிய நபராக கபிள் ஷர்மா இருக்கின்றார். இவர் மிக பெரிய சொகுசு விரும்பி என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அவரிடத்தில் இருக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பே சான்று.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

கபிள் ஷர்மாவிடம் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350, ரேஞ்ஜ் ரோவர் இவோக், வால்வோ எக்ஸ்சி90, டிசி வேனிட்டி வேன் என பல விலையுயர்ந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 500 பைக்கும் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளது. கபிள் ஷர்மா வைத்திருக்கும் கார்களிலேயே அதிக விலைக் கொண்ட மாடலாக பென்ஸ் எஸ்350 கார் இருக்கின்றது.

ஹீரோக்கள் கிட்டகூட இந்த மாதிரி கார் இருக்குமா தெரியல! மிக அதிக விலைகொண்ட லக்சூரி கார்களை வைத்திருக்கும் காமெடி நடிகர்கள்!!

இக்கார் இந்தியாவில் ரூ. 1.2 கோடி மதிப்பில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக வால்வோ எக்ஸ்சி90 கார் இருக்கின்றது. இக்காரின் விலை ரூ. 77.41 லட்சம் ஆகும். மேலும், இவர் பயன்படுத்தும் ரேஞ்ஜ் ரோவர் இவோக் காரின் விலை 65 லட்சம் ரூபாய் இருக்கின்றது. இவையனைத்தைக் காட்டிலும் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள வாகனமாக அவரின் வேனிட்டி வேன் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Comedy Actors & Their Luxury Cars: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X