பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் சொகுசு காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... அட இவரும் வாங்கிட்டாரா!!

லம்போர்கினி நிறுவனத்தின் பிரபல சொகுசு காரான உருஸ் எஸ்யூவிக்கு பாலிவுட் திரையுலகில் மவுசு கூடிக் கொண்டே வருகின்றது. புதிதாக ஓர் பிரபல பாடகர் ஒருவரும் இக்காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

உலகப் புகழ்பெற்ற சொகுசு உற்பத்தி நிறுவனமான லம்போர்கியின் உருஸ் காருக்கு உலகளவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, இந்த காருக்கு பாலிவுட் திரையுலகில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. மிக சமீபத்தில் பிரபல இந்தி திரைப்பட நடிகரான கார்த்திக் ஆர்யன் தனது சொந்த பயன்பாட்டிற்காக அண்மையில் உருஸ் காரை வாங்கியிருந்தார்.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இக்காரை உடனடியாக பெறுவதற்காக ரூ. 50 லட்சம் கூடுதலாக அவர் செலவு செய்ததாகக் கூறப்படுகின்றது. தற்போது லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காருக்கு உலகளவில் அமோகமான டிமாண்ட் நிலவி வருகின்றது. ஆகையால், இக்காரை கைகளில் பெற வேண்டுமானால் சில காலங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை நிலவுகின்றது.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இந்தியாவிலும் இக்காருக்கு காத்திருப்பு காலம் சற்று கூடுதல். இந்த நிலையில்தான் கார்த்திக் ஆர்யன் தனக்கான லம்போர்கினி உருஸ் காரை உடனடியாக பெற வேண்டும் என்பதற்காக கூடுதலாக பணத்தைச் செலவழித்து அக்காரை ஸ்பஷெலாக இறக்குமதி செய்து வாங்கியிருந்தார். இதற்காகவே காரின் விலையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.50 லட்சத்தை அவர் செலவு நேரிட்டது.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இவ்வாறு பாலிவுட் திரையுலகினர் பலர் இக்காருக்கு தீவிர ஃபேனாகி வரும்நிலையில் இதே திரையுலகைச் சார்ந்த பிரபல பாடகர் ஒருவரும் லம்போர்கினி உருஸ் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரே சிங்கால், இவரே புத்தம் புதிய மஞ்சள் நிற லம்போர்கினி உருஸ் காரை வாங்கியவர் ஆவார்.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இவரிடத்தில் ஏற்கனவே லம்போர்கினி நிறுவனத்தின் அவெண்டேட்டர் மற்றும் ஹூராகேன் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே லம்போர்கினி உருஸ் காரை அவர் வாங்கியிருக்கின்றார். அவெண்டேட்டர் மற்றும் ஹூராகேன் சூப்பர் கார்களை இந்தியாவின் மிக மோசமான சாலைகளில் வைத்து இயக்குவது என்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும்.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

எனவேதான் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதிக் கொண்ட உருஸ் எஸ்யூவி ரக காரை அவர் வாங்கியிருக்கின்றார். இதனை இந்தியாவின் எந்தமாதிரியான சாலையில் வைத்து வேண்டுமானாலும் இயக்க முடியும். அதேசமயம், இக்காரில் சொகுசு வசதிகளும் ஏராளம். குறிப்பாக, எந்தமாதிரியான கரடு-முரடான சாலையில் பயணித்தாலும் அதிக சொகுசான அனுபவத்தை உருஸ் வழங்கும்.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

எனவேதான் திரை நட்சத்திரங்கள் தொடங்கி சொகுசான பயண அனுபவத்தை விரும்பும் தொழிலதிபர்கள் வரை பலர் இக்காரின் பக்கம் அதிகம் சாய்ந்து வருகின்றனர். லம்போர்கினி உருஸ் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜினையே லம்போர்கினி நிறுவனம் உருஸ் எஸ்யூவி சொகுசு காரில் சேர்த்திருக்கின்றது. இந்த கார் மிக அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்ஜின்தான் பென்ட்லீ பென்டேகா, போர்ஷே கேயன்னே, ஆடி ஆர்எஸ்6 அவந்த், ஆடி ஆர்எஸ் க்யூ8 ஆகிய கார்களிலும் இடம் பெற்றிருக்கின்றது.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

லம்போர்கினி உருஸ் ஓர் நான்கு வீல்கள் இயக்கம் கொண்ட சொகுசு காராகும். இக்காரில் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இக்காரில் சிறப்பு அம்சமாக பின்பக்க வீலையும் லேசாக திருப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்கிங் போன்ற மிக முக்கியமான இடங்களில் உதவும்.

பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... இவரும் வாங்கிட்டாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இத்தகைய பன்முக சிறப்பு வசதிகள் கொண்ட சொகுசு காரையே இந்தி பாடகர் ஷ்ரே சிங்கால் வாங்கியிருக்கின்றார். இவரின் இந்த லேட்டஸ்ட் கொள்முதல் அவரின் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகிலுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Singer Shrey Singhal Buys Lamborghini Urus SUV. Read In Tamil.
Story first published: Wednesday, April 21, 2021, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X