என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற, சொகுசு வசதிகள் நிரம்பிய வாகனம் ஒன்று விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த வாகனம் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

சொகுசு கன ரக வாகனங்களைத் தயாரித்து வரும் பவுலஸ் (Bowlus) நிறுவனம், அதிகளவு லக்சூரி வசதிகள் அடங்கிய டெர்ரா ஃபர்மா எனும் டிரெய்லர் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாவின்போது முகாமிட்டு தங்குவோர்க்கான சிறப்பு வசதிகள் அடங்கிய வாகனமாக இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

வாடிக்கையாளர்கள் பலர் முன் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இதுவரை இல்லாத சிறப்பு வசதிகளுடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் கூறியிருக்கின்றது. இது ஓர் மோட்டார் ஹோம் (வாகன இல்லம்) ஆகும். ஆகையால், வீடுகளில் இருக்கக் கூடிய சகல வசதிகளை இதில் காண முடியும்.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

குறிப்பாக, மனிதர்கள் மட்டுமின்றி அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கான அடிப்படை வசதிகளும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவே இந்த வாகனத்தில் காணப்படும் மிக முக்கியமான அம்சமாக காட்சியளிக்கின்றது.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், நாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கக் கூடிய கட்போர்டு, அவை உறங்குவதற்கு ஏதுவான மெத்தை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், இந்த வாகனம் தங்களின் நீண்ட தூர சுற்றுலா பயணத்தின்போது செல்லாப் பிராணிகளை வீட்டிலேயே விட்டு செல்ல விரும்பாதோருக்கு மிக உதவியாக இருக்கும்.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

ஏனெனில் இந்த வாகனத்தில் தங்களுடைய செல்லப் பிராணிகளை அவர்களுடன் அழைத்து செல்வதற்கு ஏதுவான அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், தங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழக்கூடிய பிராணிகளை அவர்களுடனே அழைத்து செல்பவர்களுக்கு இவ்வாகனம் பேருதவியாக இருக்கும் என தெரிகின்றது.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த சொகுசு வாகனம் 26 அடி நீளமுள்ள டிரெய்லர் ஆகும். இதனையே சொகுசு வசதிகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற வாகனமாக பவுலஸ் உருவாக்கியிருக்கின்றது. இந்த வாகனத்தில் தானியங்கி கிளைமேட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது பிராணிகளுக்கு தேவையான கால நிலையை தானாக மாற்றி அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

ஆகையால், செல்லப் பிராணிகள் வாழ தகுதியான வாகனமாக இது இருக்கின்றது. தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கு மட்டுமின்றி அதன் உரிமையாளர்களுக்கும் சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதற்கான வசதிகள் பல இவ்வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஹெப்பா ஏர் ஃபில்டர், நீர் சுத்திகரிப்பு கருவி, பஞ்சுபோன்ற மெத்தை, கிருமிகளை அழிக்கக்கூடிய யுவிசி மின் விளக்குகள் என எக்கசக்க சிறப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

இதில் 4 பேர் வரை படுப்பதற்கு ஏதுவான மெத்தைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, நான்கு பேர் வரை அமர்ந்து உண்ணுவதற்கு ஏதுவான டைனிங் டேபிள், சிறிய சமையல் மற்றும் கழிவறை உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, ப்ளூடூத் இணைப்பு, இணைய வசதி, ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற தொழில்நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

ஆகையால், இந்த வாகனத்தில் பயணிப்போர் நிச்சயம் தங்களின் சுற்றுலாவை மிகவும் மகிழ்ச்சியுடன் மற்றும் பொழுதுபோக்குடன் அனுபவிப்பார்கள் என்பது மிக தெளிவாக தெரிகின்றது. தொடர்ந்து, 16 மைல் தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கக் கூடிய மின்சார அமைப்பும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன சொல்றீங்க இந்த வசதிகள் எல்லாம் இதுல இருக்கா?... வியப்பை ஏற்படுத்தும் லக்சூரி வாகனம்! விலை எவ்ளோ தெரியுமா?

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட வாகனத்தை 265,000 என்ற அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.9 கோடி ஆகும். அதேசமயம், இந்த வாகனத்தைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Bowlus Launched Limited Edition Motor Home For Pet-Flex Friendly. Read In Tamil.
Story first published: Friday, February 5, 2021, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X