300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

உலகளவில் பிரபலமான புகாட்டி சிரோன் கார்களின் தயாரிப்பு எண்ணிக்கை 300ஐ தொட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

தற்சமயம் பொது சாலைக்கென விற்பனை செய்யப்படும் அதிவேகமான கார்களுள் புகாட்டியின் சிரோனும் ஒன்று. இதனால் விற்பனையில் இல்லாவிட்டாலும், இந்த புகாட்டி காருக்கு நம் நாட்டிலும் ரசிகர்கள் ஏராளம்.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

வேகத்திற்கு ஏற்ப இதன் விலையும் மிக அதிகம். இதனால் புகாட்டி சிரோன் கார்களை மிகவும் பணக்காரர்களாக இருக்கும் பில்லியனர்களே பெரும்பாலும் வாங்குகின்றனர். இப்படிப்பட்ட கார் இதுவரையில் 300 யூனிட்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

இதன் 300வது மாதிரி பிரான்ஸில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முழுவதும் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. பளபளப்பான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 300வது மாதிரி புகாட்டி சிரோன் புர் ஸ்போர்ட் காராகும். இந்த கருப்பு நிறத்தை புகாட்டி நிறுவனம் நோக்டுர்னல் (இரவு) என அழைக்கிறது.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

புர் ஸ்போர்ட் வேரியண்ட் என்பதால் பின்பக்கத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடி, முன்பக்க கண்ணாடிக்கான வைபர்கள், புகாட்டி நிறுவனத்திற்கே உண்டான குதிரை லாடம் வடிவிலான க்ரில் மற்றும் பின்பக்க விங் உள்ளிட்டவை க்ரே கார்பன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

புகாட்டி நிறுவனத்தின் லோகோ கிரிஸ் ரஃபேல் என்ற நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. டார்க் நிற பெயிண்ட்டிற்கு மத்தியில் பின்பக்க ஹெட்லைட்டின் பெசல்ஸ் மற்றும் சக்கரங்கள் உள்ளிட்டவற்றில் சற்று பளிச்சிடும் நிறத்தை பார்க்க முடிகிறது.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

என்ஜின் மூடி கார்பன் ஹுட் ஆகும். லெதர் & அல்காண்ட்ரா பாகங்களின் மூலமாக இந்த 300வது புகாட்டி சிரோனின் உட்புறம் பெலுகா கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரோனில் மேற்கூரையின் ஒரு பகுதியை நீக்கி வானை பார்க்கும் வசதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புகாட்டி சிரோன் புர் ஸ்போர்ட் காரில் 8.0 லிட்டர் குவாட்-டர்போ டபிள்யூ16 என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 1,479 பிஎச்பி மற்றும் 1,600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகும்.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

15 சதவீதம் சிறிய அளவிலான ட்ரான்ஸ்மிஷன் விகிதத்தை பெறுவதினால், சிரோன் புர் ஸ்போர்ட் வழக்கமான சிரோன் கார்களை காட்டிலும் கூடுதல் வேகமானதாகும். இந்த காரில் 0வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.3 வினாடிகளிலும், 200kmph வேகத்தை 5.5 வினாடிகளிலும், 300kmph வேகத்தை 12 வினாடிகளுக்கு உள்ளாகவும் எட்டிவிட முடியும்.

300வது சிரோன் கார் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது!! புகாட்டியின் மற்றுமொரு மைல்கல்...

300வது சிரோன் காரை உருவாக்கியுள்ளதன் மூலம் தரத்திலும் கஸ்டமைஸ்ஷேனிலும் தங்களது ஈடுப்பாட்டை வெளிகாட்டியுள்ளதாக கூறியுள்ள புகாட்டி நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் வின்கெல்மேன், நம்ப முடியாத ட்ரைவிங் செயல்திறன் உடன் என்ஜினியரிங் மற்றும் டிசைனையும் சிரோனில் ஒருங்கிணைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti Chiron achieves 300 units production milestone. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X