கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

எல்இடி விளக்குகளை கொண்ட கார்கள் என்றாலே அவை தனி அழகு. அதுமட்டுமில்லாமல் இத்தகைய விளக்குகளை கொண்டிருந்தால் தான் அவை தற்போதைய மாடர்ன் காலக்கட்ட கார்களாக இருக்க முடியும்.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தால் இவற்றினாலும் காருக்கு சில தீமைகள் உள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இவற்றை பார்த்த பின்பு எல்இடி விளக்குகளை காரில் பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

பொதுவாக எல்இடி விளக்குகள் பயன்பாட்டில் இருக்கும்போது வெப்பத்தை வெளியிடக்கூடியவை. இதனால் இவற்றை குளிர்விக்க சில தொழிற்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. பல்ப்கள் மிகவும் சிறியதாகவே இருக்கும். கூலிங் சிஸ்டம் தான் அளவில் பெரியதாக இருக்கும்.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

எல்இடி விளக்குகளுடன் அவற்றிற்கான கூலிங் சிஸ்டத்தையும் சேர்த்து தான் நாம் வாங்குகிறோம். முன்பு பயன்பாட்டில் இருந்த ஹலோஜன் விளக்குகளை காட்டிலும் எல்இடி விளக்குகள் பிரகாசமானவை.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

ஆனால் இதுதான் எல்இடி விளக்குகளை பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியையே எழுப்புகிறது. ஏனெனில் எல்இடி விளக்குகளின் அதிக பிரகாசத்தினால் அதிக விபத்துகள் நடப்பதாகவும், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் போலீசாரே கூறும் வீடியோவை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள்.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

பாதசாரிகளால் இத்தகைய விளக்கினால் எதிர்வரும் வாகனத்தை எளிதில் அடையாளம் காண முடிவதில்லை. இதுவே விபத்திற்கு கொண்டு செல்கிறது. இதனால் எல்இடி விளக்குகள் கொண்ட காரை பயன்படுத்துவோர் தயவு செய்து ஒளி பிரகாசத்தை குறைவாக வைத்து கொள்ளுங்கள்.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு ஓட்டுனர் பக்க எல்இடி ஹெட்லைட்டின் பிரகாசத்தை முன் இருக்கை பயணியின் பக்கத்தை காட்டிலும் குறைவாக வழங்குகின்றன. ஆனால் சில கார்களில் மட்டுமே இவ்வாறு வழங்கப்படுகின்றன.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

எல்இடி விளக்குகள் வெள்ளை நிற பொருட்களில் அதிகளவில் ஒளியினை பிரதிப்பலிக்கக்கூடியவை. இதனால் வெள்ளை பனி நிறைந்த பகுதிகளில் காரை ஓட்டுவது கடினம். மாற்றாக, பல்ப் ஃபாக் விளக்குகளை கார் கொண்டிருந்தால் பயணம் சற்று எளிமையானதாக இருக்கும்.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

வழக்கமான ஹலோஜன் விளக்குகளுடன் ஒப்பிடும்போது எல்இடி விளக்குகளின் விலைகள் சற்று அதிகம். அதிக பிரகாசம் மட்டுமின்றி ஆயுட் காலமும் எல்இடி விளக்குகளில் அதிகமே.

கார்களில் எல்இடி விளக்குகளினால் இவ்வளவு பிரச்சனை வருமா!! கார் வாங்குமுன் இத தெரிஞ்சிக்கோங்க!

அன்றாட அலுவலக பயன்பாட்டிற்காக மட்டுமே உங்களது காரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு இவ்வாறான ஆற்றல்மிக்க எல்இடி விளக்குகள் அவசியமானதில்லை என்பது எங்களது கருத்து.

Most Read Articles

English summary
Disadvantages of Car LED lights. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X