கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்

கொரோனா லாக்டவுன் காரணமாக டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றமான சூழல் நிலவுகிறது.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக வாகன உற்பத்தி அடியோடு முடங்கியது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த துணை வர்த்தக நிறுவனங்களும் பெரிய நஷ்டத்தை சந்தித்தன.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்த ஆட்டோமொபைல் துறை தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பெரிய பாதிப்பை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா இருந்து வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அங்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

இதனால், அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மஹிந்திரா வாகன ஆலைகளில் குறைந்த பணியாளர்களுடன் உற்பத்தி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் ஆலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் கார்களின் உற்பத்தி பலத்த பாதிப்பை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

மேலும், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் குறித்த நேரத்தில் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, புதிதாக புக்கிங் செய்ய செல்வோருக்கும் அதிக வெயிட்டிங் பீரியட் குறித்த தகவலால் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

கொரோனா லாக்டவுன் மட்டுமின்றி, செமி கன்டக்டர் எனப்படும் கார்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மின்னணு சாதனத்திற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதுவும் கார் உற்பத்தியில் பின்னடவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு பக்கம் புதிய கார்களுக்கான தேவை சிறப்பாக இருந்தும் குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து கொடுக்க முடியாத நிலையில் கார் நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மேலும், வர்த்தகத்திலும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

Most Read Articles

English summary
Tata and Mahindra car production has affected due to corona lockdown in Maharashtra.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X