சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

பிரபல தனியார் நிறுவனம் ஒன்று உலக புகழ்பெற்றி மின்சார காரை 24 கேரட் தங்கத்தால் அலங்கரித்திருக்கின்றது. இக்கார்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

பிரபல செல்போன் மாடிஃபிகேஷன் நிறுவனமான கேவியர் (Caviar) டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் மின்சார காரை தங்கத்தால் அலங்கரிப்பு செய்துள்ளது. ஐபோன்களை தங்கத்தால் அலங்கரிப்பு செய்வதில் புகழ்பெற்ற நிறுவனமாக விலங்கி வரும் நிறுவனமே, கேவியர். உலக பணக்காரர்கள் பலரின் கைகளில் தங்கத்தால் ஜொலிக்கும் ஐ-போன்கள் இந்நிறுவனத்தின் கை வண்ணத்தில் மாடிஃபை செய்யப்பட்ட போன்களே ஆகும்.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

இத்தகைய புகழ்வாய்ந்த நிறுவனமே தற்போது முதல் முறையாக காரை தங்கத்தால் அலங்கரிப்பு செய்திருக்கின்றது. இதற்காக இந்நிறுவனம் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் மின்சார காரை பயன்படுத்தியிருக்கின்றது. மேலும், காரை அலங்கரிப்பு செய்ய சுத்தமான 24 கேரட் தங்கத்தை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

டெஸ்லா மாடல் எஸ் மின்சார காரின் ரேடியேட்டர் க்ரில், ஸ்கர்ட்ஸ், பம்பர்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதாவது, வழக்கமான உலோகத்தில் இருந்த இப்பாகங்கள் நீக்கப்பட்டு, அவற்றிற்கு பதிலாக அந்தந்த இடங்களில் 24 கேரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

காரின் வீல் மற்றும் ஏர் இன்டேக்கர்களிலும் தங்கத்திலான பாகமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, டெஸ்லா மின்சார காருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கிரீடம் போன்ற லோகோ காரின் முகப்பு பானட் மற்றும் பின்பக்க பம்பரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

இது காருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், கேவியர் நிறுவனத்தின் இந்த தனித்துவமான நடவடிக்கையால் உலகின் மிக மிக விலையுயர்ந்த மின்சார காராக டெஸ்லா மாடல் எஸ் மாறியிருக்கின்றது. இதுபோன்று தங்கத்தால் 99 கார்களை நிறுவனம் உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

இவற்றை லிமிடெட் எடிசன்களாக விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெஸ்லா மாடல் எஸ் மின்சார காரில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட பாகங்கள் மட்டுமே கூடுதல் சேர்ப்பாக செய்யப்பட்டுள்ளது. ஆகையால், மின் மோட்டார் மற்றும் ரேஞ்ஜ் விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறவில்லை.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

டெஸ்லா மாடல் எஸ் மின்சார கார் மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 மைல்கள் எனும் வேகத்தை எட்ட வெறும் 1.9 செகண்டுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். இத்தகைய அதீத திறன் கொண்டதே மாடல் எஸ் மின்சார கார்.

சுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு!!

Image Courtesy: Caviar

டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதற்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், தனது முதல் ஷோரூமை நாட்டில் அமைப்பதற்கான முயற்சியில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
Caviar Modified Tesla Model S Electric Car With 24k Gold. Read In Tamil.
Story first published: Friday, April 30, 2021, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X