வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

சியட் டயர் விற்பனை மையங்கள் இனி முழுமையான வாடிக்கையாளர் சேவை மையங்களாக செயல்படும் என்று சியட் டயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

டயர் உற்பத்தியில் பிரபலமாக விளங்கும் சியட் நிறுவனம் வாடிக்கையாளர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தனது டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, தற்போது டயர் விற்பனை மையங்கள் அனைத்தும் இனி முழுமையான வாடிக்கையாளர் சேவை மையங்களாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

தற்போது நாடு முழுவதும் 200 அங்கீகரிக்கப்பட்ட நேரடி டயர் விற்பனை மையங்களுடன் செயல்பட்டு வருகிறது சியட் நிறுவனம். இந்த மையங்களில் டயர் விற்பனை, வீல் பேலன்சிங், வீல் அலைன்மென்ட் உள்ளிட்ட பணிகள் செய்து தரப்படுகின்றன.

வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவையை வழங்கும் விதத்தில், இந்த டயர் விற்பனை மையங்களில் இனி வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்படும் விதத்தில் சேவை மையங்களாக செயல்படும்.

வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

டயர்களை மாற்றிக் கொள்வதற்கும், வாடிக்கையாளர்களை புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த 200 மையங்களும் இனி செயல்படும். மேலும், டயர்களுக்கான வாரண்டி பதிவு, கார் உரிமையாளர்கள் கூடுதல் சிறப்பு வாரண்டி உள்ளிட்டவற்ரை பெறுவதற்கும் இங்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

சியட் ஷாப் என்ற பெயரில் இந்த நேரடி விற்பனை மையங்கள் செயல்பட உள்ளன. இந்த விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படும். இதன்மூலமாக, மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும் என்று சியட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

"வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் மன நிறைவுடன் டயர் வாங்கும் நடைமுறையை மேற்கொள்ளும் விதத்தில் இந்த சியட் ஷாப் மையங்கள் செயல்படும். மேலும், டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிபந்தனையில்லாத வாரண்டி திட்டத்தையும் பெற முடியும்.

வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!

சேவையில் ஏதெனும் குறைபாடு இருந்தால், இந்த 200 மையங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் உடனடியாக தீர்வு பெற முடியும்," என்று சியட் டயர்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி அமித் டோலனி தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
CEAT Tyres has announced that its service outlets Shoppes will now act as a full-fledged customer service center. The RPG group tyre manufacturing arm currently operates 200 such outlets pan-India, which have been providing services such as computerized wheel alignment, balancing and nitrogen inflation, among others.
Story first published: Wednesday, February 3, 2021, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X