"48 மணி நேரம்தான் டைம் முழு தொகையையும் கட்டிடுங்க" - நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீத தொகையை செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 48 மணி நேரம் அவகாசம் கொடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த தனது சொகுசு காருக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, உடனடியாக வரியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்திருந்தது.

இத்துடன், நடிகர் விஜய்மீது கடுமையான விமர்சனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் வைத்தது. இந்த விமர்சனத்தையும், ஒரு லட்ச ரூபாய் அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கூறி நடிகர் விஜய் தரப்பு தனது வழக்கை மேல் முறையீடு செய்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் மீது கடும் விமர்சனத்தை வைத்த அதே நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தற்போது நடிகர் தனுஷ் மீதும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். நடிகர் தனுஷ் 2015ம் ஆண்டில் ஓர் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்திருக்கின்றார். இந்த விலையுயர்ந்த காருக்கான நுழைவு வரியையே ரத்து செய்யுமாறு அவர் மனு அளித்திருந்தார்.

இவ்வழக்கின் அடிப்படையிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம், நடிகர் தனுஷ் மீது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பொறுப்புள்ள குடிமக்களாக செயல்பட வேண்டும், என்றும், வரி செலுத்தாமல் பொது சாலைகளில் தங்கள் கார்களை ஓட்டக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, எந்தவொரு விளக்கும் அளிக்காமல் வரியை அடுத்த 48 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2015ம் ஆண்டு அன்றே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை தனுஷ் இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றார். அப்போது அவர் ரூ. 30 லட்சம் வரை வரியாக செலுத்தியிருக்கின்றார்.

ஆனால், இது ஒட்டுமொத்த வரியில் 50 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள வரியில் இருந்தே தனக்கு விளக்கு அளிக்கு வேண்டும் என்ற கோரிக்கையை தனுஷ் 2015ம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் விடுத்திருக்கின்றார். ஆனால், இதனை தற்போது நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது. இத்துடன், உடனடியாக நிலுவை வரியை செலுத்த வேண்டும் என்றும் அது கூறியிருக்கின்றது.

அதேசமயம், தற்போது தனுஷ் தரப்பு தாங்கள் முழு வரியையும் செலுத்த தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றது. இத்தகவலை தனுஷின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இவ்வழக்கை பார்த்து வந்த வழக்கறிஞர் இறந்துவிட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்கைத் திரும்ப பெற நீதிமன்றத்தின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜயைத் தொடர்ந்து தனுஷையும் நீதிமன்றம் விமர்சித்திருப்பது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு உச்சபட்ச அளவில் வரி விதிக்கப்பட்டு வருகின்றது. 15 சதவீதம் தொடங்கி 125 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

சிகேடி வாயிலாக இறக்குமதி செய்யும் இருசக்கர வாகனத்திற்கு 25 சதவீதமும், பயணிகள் வாகனங்களுக்கு 30 சதவீதமும், ட்ரக் மற்றும் பேருந்து போன்றவற்றிற்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகின்றது. இதேபோல், சிபியூ வாயிலாக இறக்கு செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீதமும், 40 ஆயிரத்திற்கும் குறைவான அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கார்களுக்கு 60 சதவீதமும், 40 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விலைக் கொண்ட கார்களுக்கு 100 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது.

இதுவே பயன்படுத்திய வாகனமாக இருந்தால் அதற்கு உச்சபட்சமாக 125 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இத்தகைய உச்சபட்ச வரியை குறைக்கும் நோக்கிலேயே தனுஷ் மற்றும் விஜய் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவற்றையே உயர்நீதி மன்றம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலைகுறித்த விபரம் தெரிய வரவில்லை. இருப்பினும், அது ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலைக் கொண்ட சொகுசு கார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அவர் சிபியூ வாயிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai hc orderd to actor dhanush to pay rs 30 lakh as tax for imported rr car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X