செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

விற்பனைக்கு பிந்தைய சேவை கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் தொடரும் என செவர்லே நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

செவர்லே நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் தற்போதும் அந்நிறுவனத்தின் பல இந்திய சாலைகளில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக நிறுவனத்தின் டவேரா, பீட் மற்றும் க்ரூஸே போன்ற கார்கள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

இத்தகையோருக்கே சந்தோஷத்தை வழங்கும் வகையில் ஓர் தகவலை செவர்லே வெளியிட்டிருக்கின்றது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றாலும், தனது விற்பனைக்கு பிந்தைய சேவையை மட்டும் தொடர்ச்சியாக இந்தியாவில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

அதவாது, தனது வாகனங்களைத் தற்போதும் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சர்வீஸ், காருக்கான உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றைத் தொடர்ச்சியாக கிடைக்கச் செய்கின்ற பணியில் தடையின்றி செயல்பட இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

ஆகையால், கடந்த 2020ம் ஆண்டைப் போலவே 2021ம் வருடத்திலும் செவர்லே நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவைத் தொடர்ச்சியாக கிடைக்கும் என்பது உறுதியாக தெரிய வந்திருக்கின்றது. இந்நிறுவனம் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 142 சர்வீஸ் மையங்களை செயல்படுத்தி வருகின்றது. இவற்றின் மூலமே தனது வாடிக்கையாளர்களுக்கான சேவையை செவர்லே வழங்க திட்டமிட்டிருக்கின்றது.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதிரிபாகங்களும் தலேகான் எனும் பகுதியில் இருந்து சப்ளை செய்யப்படுகின்றன. இதுதவிர சில தனி நபர்களைக் கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த சப்போர்டினை அது வழங்கி வருகின்றது.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

இரு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்தியாவில் வீர நடைப் போட்டு வந்த செவர்லே நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நாட்டை விட்டு வெளியேறியது. மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியான இடத்தில் இந்நிறுவனமே இருந்தது. ஆனால், இந்த நிலை வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் லேசான அடியை விற்பனை விகிதத்தில் பெற தொடங்கியது. இது 2016ல் சற்று கூடுதலாகவே இருந்தது. தொடர்ந்து 2017ம் ஆண்டிலும் மிக மோசமான நிலையேக் காணப்பட்டது. எனவேதான் அனைத்து செயல்பாடுகளுக்கும் செவர்லே நிறுவனம் முற்றுப் புள்ளி வைத்தது.

செவர்லே காரை வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்... ரொம்ப முக்கியமானதுங்க!

அதாவது, இந்திய வாகன சந்தையே வேண்டாம் என மூட்டையைக் கட்டிக் கொண்டு அமெரிக்காவிற்கே புறப்பட்டது. வெளியேறிய பின்னரும் முன்னதாக விற்பனைச் செய்த அனைத்து கார்களுக்கும் சிறப்பான சர்வீஸ் மற்றும் பிற சேவைகளை வழங்கும் விதமாக தற்போதும் செவர்லே செயல்பட்டு வருகின்றது.

Most Read Articles
மேலும்... #செவர்லே #chevrolet
English summary
Chevrolet Announced To Continue After-Sales Support By 2021. Read In Tamil.
Story first published: Friday, January 8, 2021, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X