என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர்கதையாகும் காப்பியடிப்பு நிகழ்வு! சீன நிறுவனம் அட்ராசிட்டி!

சீன நிறுவனம் ஒன்று ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல தயாரிப்பை டூப்ளிகேட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

ஃபோர்டு நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி-யும் ஒன்று. இந்த காரின் தோற்றத்தை தழுவி சீனாவைச் சேர்ந்த ஓர் வாகன உற்பத்தி நிறுவனம், புதிய மின்சார காரை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

சீன நிறுவனம் இதுபோன்று டூப்ளிகேட் செய்து வாகனங்களை உருவாக்குவது முதல் முறையல்ல. முன்னதாக ரோல்ஸ் ராய்ஸ் தொடங்கி உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை டூப்ளிகேட் செய்து சீன நிறுவனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றன.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிஒய்டி நிறுவனம் யுவான் ப்ரோ இவி எனும் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதனை விலைக்குறைந்த மின்சார காராக நிறுவனம் நாட்டில் (சீனாவில்) விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

யுவான் ப்ரோ இவி-யின் வெளிப்புற தோற்றம் முழுக்க முழுக்க ஃபோர்டு ஈகோ ஸ்போர்டு காரை போன்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. மேற்கூரையில் தண்டவாளம் போன்ற அமைப்பு, கருப்பு நிற கிளாடிங்குகள் மற்றும் அலாய் வீல் டிசைன் உள்ளிட்டவை ஈகோஸ்போர்ட் காரையே நமக்கு நினைவுப்படுத்துகின்றன.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

தொடர்ந்து, காரின் பின்பகுதியும் ஈகோஸ்போர்டை கண்ணெதிரே கொண்டு வரும் வகையிலேயே இருக்கின்றது. 4.37 மீட்டர் நீளம், 2,535 மிமீ வீல்பேஸ் ஆகிய அளவுகளில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஃபோர்டு ஈகோஸ்போர்டைவிட மிக சிறிய கூடுதல் அளவாகும்.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

யுவான் ப்ரோ இவி காரின் உட்பகுதி:

மின்சார காரின் உட்பகுதியும் ஃபோர்டு ஈகோ ஸ்போர்டை தழுவிய வண்ணம் இருக்கின்றது. ஆனால், சிறப்பம்சங்களில் இது மாறுபட்டு காணப்படுகின்றது. அந்தவகையில், 10.1 இன்சிலான தொடுதிரை, 8 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரியர் பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

தொடர்ந்து, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பாதுகாப்பு புரோக்ராம், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஏராளமான வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய வசதிகள் கொண்ட மின்சார காரையே பிஒய்டி சீனாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

என்ன இந்த காரையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்களா? தொடர் கதையாகும் காப்பியடிக்கும் நிகழ்வு! சீன நிறுவனத்தின் அட்ராசிட்டி!

யுவான் ப்ரோ இவி மின்சார காரில் 38.9kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 301கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது ஆரம்ப நிலை வேரியண்டின் ரேஞ்ஜ் திறன் ஆகும். இதன் உயர்நிலை வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜிற்கு 401 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
China's New CopyCat Ford EcoSport Electric SUV Debuts. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X