ஒரு துண்டு கபாப்பிற்கு ஆசைப்பட்டு லம்போர்கினி காரை ரிப்பேர் செய்த சீனர்! ப்ளீஸ் வீடியோவ பாத்து சிரிக்காதீங்க!

ஒரு துண்டு கபாப்பை ரெடி செய்ய போய் லம்போர்கினி சூப்பர் காரை சீன இளைஞர் ஒருவர் ரிப்பேர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

கபாப் எனப்படும் இறைச்சி வகை உணவை விரும்பாத அசைவ பிரியர்களே இருக்க முடியாது என கூறிவிடலாம். ஏனெனில், பலரின் விருப்ப உணவாக கபாப் ரக உணவு இருக்கிறது. இந்த உணவை தயார் செய்ய முயன்ற சீனர் ஒருவருக்கு மிக மோசமான அனுபவம் அரங்கேறியிருக்கின்றது. இவர், கபாப்பினை தயார் செய்ய, வீட்டில் இருந்த அடுப்பை பயன்படுத்தாமல் தனது விலையுயர்ந்த லம்போர்கினி சூப்பர் காரை பயன்படுத்தியிருக்கின்றார்.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

இதன் விளைவாகவே மிக மோசமான மற்றும் மாபெரும் இழப்பை அவர் சந்தித்திருக்கின்றார். பொதுவாகவே அதிக திறன் வெளிப்பாட்டிற்கு பெயர்போன கார்களாக லம்போர்கினி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன. இந்த திறன் வெளிப்பாட்டைக் கொண்டே கபாப் செய்ய அந்த இளைஞர் முயற்சித்திருக்கின்றார்.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

இதற்காக ஓர் குச்சியில் ஒற்றை இறைச்சித் துண்டை சொருகிய அந்த நபர், காரின் ஆக்சலரேசனை விட்டு விட்டு இயக்கினார். இதன்மூலம் எக்சாஸ்ட் குழாய் வாயிலாக வெளி வந்த நெருப்பைக் கொண்டு இறைச்சியை அவர் சுடவும் ஆரம்பித்தார். விரைவில் கபாப்பை தயார் செய்யும் வகையில் காரின் ஆக்சலரேஷனை முறுக்கிய வண்ணம் இருந்தார்.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

தொடர்ச்சியாக ஆக்சலரேஷனை விட்டு விட்டு அழுத்திய வண்ணம் இருந்தார். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே காரில் இருந்து திடீரென புகையுடன் கூடிய வெடிப்பு சத்தம் வந்தது. இதனால் பதறிபோன லம்போர்கினி காரின் உரிமையாளர் உடனடியாக காரின் எஞ்ஜினை அனைத்து, பேனட்டையும் திறந்து விட்டார். இருப்பினும், எஞ்ஜினில் இருந்து ஆயில் கீழே வழி தொடங்கின.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

சிவப்பு நிறத்தில் வெளிவந்த அந்த எண்ணெய் எஞ்ஜினை கூலாக்க உதவும் ஆயில் என கூறப்படுகின்றது.. ஆரம்பத்தில் இளைஞரின் செய்கையைக் கண்டு நகைத்த அவரின் சக நண்பர்கள், பின்னர் நிலைமையை உணர்ந்து அவருக்காக பாவப்பட தொடங்கினர்.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

அதேசமயம், இணைய வாசிகள் சிலர் இளைஞரின் செயலை கண்டு வருத்தெடுக்க தொடங்கினர். ஒரு சிலர் அவருக்காக வருத்தப்படவும் தவறவில்லை. கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அதிக குளிர்ச்சியாக இருந்த காரணத்தினால் காரின் எஞ்ஜினில் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என தி டிரைவ் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

மேலும், இந்த வெடிப்பால் கார் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்திருக்காது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இளைஞர் கபாப் செய்ய பயன்படுத்தியது லம்போர்கினி அவென்டேட்டர் மாடல் காராகும். இது இந்தியாவில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமா விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

அவென்டேட்டர் எஸ், அவென்டேட்டர் எஸ் ரோட்ஸ்டர், அவென்டேட்டர் எஸ்விஜே ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 6.5 லிட்டர் வி12 எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 700 பிஎஎஸ் மற்றும் 690 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ வேகம் ஆகும்.

கபாப் செய்ய-போயி விலையுயர்ந்த சூப்பர் காரை பறிகொடுத்த சீனர்... இது தேவையா... விழுந்து விழுந்து சிரித்த நண்பர்கள்!!

இத்தகைய சூப்பர் பவர் கொண்ட காரையே கபாப் செய்ய முயற்சித்து சீன இளைஞர் அதனை பழுதாக்கியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை குவென் ஹூய்சோங் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chinese YoungMan Uses Lamborghini Super Car To Cook Kebab; But Something Went Wrong. Here Is Full Details. Read In Tamil.
Story first published: Monday, June 7, 2021, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X