முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காருக்கு வழங்கப்படவுள்ள ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரின் மூலமாக இந்திய சந்தைக்குள் நுழைய படு வேகமாக ஆயத்தமாகி வருகிறது.

முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

2.0 லிட்டர் டீசல் என்ற ஒரே ஒரு என்ஜின் உடன் விற்பனயை துவங்க இருந்தாலும், இந்த சிட்ரோன் கார் ஃபீல் & ஷைன் என்ற இரு விதமான வேரியண்ட்களில், 7 விதமான கவர்ச்சிகரமான நிறங்களில் நம் நாட்டில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

இதற்கிடையில் தற்போது இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கு வழங்கப்படவுள்ள ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் கார்வாலே செய்திதளம் மூலமாக நமக்கு தெரியவந்துள்ளன. சி5 ஏர்க்ராஸ், ப்ரீமியம் தரத்திலான காராக அறிமுகப்படுத்தப்பட உள்ளதை மீண்டும் இங்கு நினைவுப்படுத்தி கொள்கிறோம்.

முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

இதனால் இதற்கு வழங்கப்படவுள்ள ஆக்ஸஸரீகளும் ப்ரீமியத்தில் தரத்தில்தான் இருக்கும் என்பது தெரிந்ததே. வெளிப்புறத்தில் இந்த கார் அலாய் சக்கர ஹப்மூடிகள், காற்று எதிரொலிப்பான்/ கதவு விஸர் மற்றும் காரை மூடும் கவர் உள்ளிட்டவற்றை ஆக்ஸஸரீகளாக பெற்றுவரவுள்ளது.

முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

இவற்றுடன் சக்கரங்களை சுழலவிடாமல் கார் திருடு போவதை தடுக்கும் போல்ட் தொகுப்பும் இந்த காருக்கான தேவையான ஆக்ஸஸரீயாக சேர்க்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் சி5 ஏர்க்ராஸின் இரு வேரியண்ட்களிலும் ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை சிட்ரோன் நிறுவனம் வழங்கவுள்ளது.

முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

அவை போதாது என்போர்க்காக ரப்பர், துணி மற்றும் வெல்வட் என வெவ்வேறான மெட்ரீயல்களில் தரைப்பாய்களை கூடுதல் ஆக்ஸ்ஸரீயாக வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். இந்த தரைப்பாய்கள் பின்பக்க பொருட்களை வைப்பதற்கான இடத்திற்கும் சேர்த்துதான் வழங்கப்படும்.

முற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா? அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் மற்றும் முன்பதிவுகள் போன்ற கூடுதல் விபரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவை தவிர்த்து, சி5 காரின் எரிபொருள் திறன் உள்ளிட்ட தகவல்கள் வேரியண்ட் வாரியாக சமீபத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பதிவிட்டுள்ளோம்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C5 Aircross accessories list detailed
Story first published: Tuesday, February 9, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X