சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் தயாரிப்பான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை (Citroen C5 Aircross SUV) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது முழுமையாக தயாராகி விட்டது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டூஸான் ஆகிய எஸ்யூவிகளுடன், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி நேருக்கு நேராக போட்டியிடும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

அத்துடன் டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார்களின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்களும், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு விற்பனையில் சவால் அளிக்கவுள்ளன. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய சந்தையில் நடப்பு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு சிட்ரோன் நிறுவனம் தற்போது முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் உள்ள சிட்ரோன் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்திலோ சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்து கொள்ள முடியும். சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிரீமியம் மாடலாக நிலை நிறுத்தப்பட்டாலும், அதற்கு ஏற்ப இந்த காருக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை ஃபீல் மற்றும் ஷைன் என மொத்தம் 2 ட்ரிம்களில் விற்பனை செய்யவுள்ளது. ஆனால் இந்த காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 177 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் நிறுவனம் சான்று வழங்கியுள்ளதாக சிட்ரோன் நிறுவனம் கூறுகிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பனரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் மிகவும் முக்கியமானவை.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதுதவிர எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிரைவ் மோடுகள் & டிராக்ஸன் மோடுகள், 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் எல்இடி ஹெட்லைட்கள் ஆகிய வசதிகளையும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பெற்றுள்ளது. ஆனால் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் அதிகாரப்பூர்வ விலைகளை சிட்ரோன் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, March 1, 2021, 22:39 [IST]
English summary
Citroen C5 Aircross Bookings Now Open Officially - Here Are All The Details. Read in Tamil
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+