ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சிஎன்ஜி கார்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான வழிமுறைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறைவது போல் தெரியவில்லை. எனவே எரிபொருள் செலவை குறைப்பதற்காக, சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு பலர் மாறி வருகின்றனர். பெட்ரோல், டீசலை விட சிஎன்ஜி-யின் விலை குறைவு.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி கார்களை இயக்குவதற்கான செலவு மிக குறைவாக இருக்கலாம். ஆனால் பூட் ஸ்பேஸை இழக்க நேரிடும், செயல்திறனில் சிறிய தொய்வு ஏற்படும் என்பது போன்ற ஒரு சில குறைபாடுகள் சிஎன்ஜி கார்களில் இருக்கின்றன. எனினும் இயக்குவதற்கான செலவு குறைவாக இருக்க வேண்டுமென்றால், சிஎன்ஜி சரியான தேர்வுதான்.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

ஆனால் சிஎன்ஜி கார்களை பராமரிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக கோடை காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிஎன்ஜி கார்களை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதை நாங்கள் இந்த செய்தியில் விளக்கியுள்ளோம். கோடை உள்பட அனைத்து கால நிலைகளுக்கும் இந்த டிப்ஸ்கள் பொருந்தும்.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

ஹைட்ரோ-டெஸ்ட்: மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிஎன்ஜி சிலிண்டர்களை ஹைட்ரோ-டெஸ்ட்டிற்கு உட்படுத்த வேண்டும். சிலிண்டர் எந்த வகையிலும் சேதமடையவில்லை என்பதையும், கசிவுகள் இல்லை என்பதையும் இதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். கோடை காலங்களில் அதிக வெப்ப நிலையில் இயங்க வேண்டும் என்பதால், அந்த சமயங்களில் இந்த சோதனை மிகவும் முக்கியமானது.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

சிஎன்ஜி சிலிண்டரை முழுமையாக நிரப்பாதீர்கள்: சிஎன்ஜி கார்களில் சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிலிண்டரில் சிஎன்ஜி எரிபொருளை முழுமையாக நிரப்ப கூடாது. கோடை காலங்களில் வெப்ப விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் இருப்பதுதான் இதற்கு காரணம். உதாரணத்திற்கு உங்கள் காரில் பொருத்தப்பட்டிருக்கும் சிலிண்டரில், 8 லிட்டர் நிரப்பலாம் என வைத்து கொள்வோம்.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

ஆனால் சிஎன்ஜி ஸ்டேஷன் ஊழியரிடம், 7 லிட்டர் மட்டும் நிரப்பும்படி கூறுங்கள். சிலிண்டரில் சிஎன்ஜி-யை முழுமையாக நிரப்ப வேண்டாம். சிஎன்ஜி எரிபொருள் தீர்ந்து நடுவழியில் எங்கேயாவது சிக்கி விடுவோமா? என்று அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் பெட்ரோல் எரிபொருளுக்கு மாறி கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கும்.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

சிலிண்டரின் காலாவதி தேதியை பாருங்கள்: சிஎன்ஜி சிலிண்டரில் அதன் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை பரிசோதித்து கொள்ளுங்கள். பொதுவாக கார்களை போலவே சிலிண்டர்களும் நீண்ட காலம் நீடித்து உழைக்கும். அவற்றின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள். இருந்தபோதும் கூட காலாவதி தேதியை பரிசோதித்து கொள்வது நல்லது.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

நிழலில் நிறுத்துங்கள்: சிஎன்ஜி கார்களை நிழலில் நிறுத்துவது அவசியம் (சிஎன்ஜி அல்லாத கார்களுக்கும் கூட இது பொருந்தும்). கோடை காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் மேலான வெப்ப நிலை வாட்டி வதைக்கும். இதன் காரணமாக காரின் கேபின் விரைவாக சூடாகி விடும். எனவே முடிந்த வரை, காரை நிழலில் நிறுத்தி வைப்பது நல்லது.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

புகை பிடிக்க கூடாது: புகை பிடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தானது. இது மரணத்தை விளைவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிஎன்ஜி காருக்குள் புகை பிடிப்பது இதை காட்டிலும் ஆபத்தானது. எனவே சிஎன்ஜி காருக்கு உள்ளே புகை பிடிக்க வேண்டாம். அத்துடன் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை சிஎன்ஜி காரில் கொண்டு செல்வதை தவிர்ப்பதும் பாதுகாப்பான விஷயம் ஆகும்.

ரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

இன்ஜினை அணைத்து விடுங்கள்: சிஎன்ஜி கார்களை வைத்திருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். சிஎன்ஜி எரிபொருள் நிரப்புவதற்கு முன்பு, காரின் இன்ஜின் அணைக்கப்பட்டிருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

Most Read Articles

English summary
CNG Car Maintenance Tips. Read in Tamil
Story first published: Thursday, July 1, 2021, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X