கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

பட்டுக்கோட்டையில் தனது கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றியிருக்கின்றனர். இதனை இலவசமாக கிராம மக்களுக்காக பயன்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் என அனைத்து உயிர்காக்கும் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுவோர் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

குறிப்பாக, ஆம்புலன்ஸ்களின் பற்றாக்குறையால் பலர் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கே பெரிதும் சிரமப்படுகின்றனர். நாட்டின் முக்கிய நகர் புறங்களிலேயே இந்த நிலைதான் தென்படுகின்றது. கிராமப்புறங்களில் இதைவிட மிக மோசமாக சூழல் நிலவுகின்றது.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இந்த நிலையில்தான் தனது கிராமப்புற மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பிராண்ட் விலையுயர்ந்த காரை ஓர் நபர் ஆம்புலன்ஸாக மாற்றி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. மகேந்திரன், இவரே அந்த நபர் ஆவார்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் கிராமப்புறங்களுக்கு 108 ஆம்புலன்ஸ்கள் வருவது மிகவும் சாவாலான ஒன்றாக மாறியுள்ளது. மேலும், தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் செலுத்தி ஏழை மக்கள் செல்வதும் இயலாத ஒன்று. இவ்விரண்டையும் அறிந்த கே. மகேந்திரன் தனது தொகுதி மக்களுக்காக அவரின் புத்தம் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரை ஆம்புலன்ஸாக மாற்றி, அவசர வாகனமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இந்திராகாந்தி இளைஞர்கள் அறக்கட்டளை சார்பாக இந்த வாகனத்தை ஆம்புலன்ஸாக மாற்றி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றார், கே. மகேந்திரன். முதலில் இவர் ஆம்புலன்ஸ் வாங்கவே திட்டமிட்டிருக்கின்றார். ஆனால், புதிய ஆம்புலன்ஸை வாங்கபோனால் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாவது செலவழிக்க வேண்டியிருக்கும்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இதனைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் புதிய ஆம்புலன்ஸுக்காக பணத்தை வீணடிக்காமல், தனது காரையே ஆம்புலன்ஸாக மாற்ற அவர் திட்டமிட்டார். இதன்படி, லேசான மாற்றங்களைச் செய்து அதனை அவர் ஆம்புலன்ஸாகவும் மாற்றியிருக்கின்றார்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

நோயாளிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக அக்காரின் முன் பகுதியில் 'வா ஒரு கை பாப்போம்' என்ற வாசகத்தை ஒட்டியிருக்கின்றார். கொரோனாவைக் கண்டு பலர் மனம் தளர்ந்து சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனை நம்மால் வெள்ள முடியும் என்பதையே இந்த வாசகத்தின் வாயிலாக அவர் கூறியிருக்கின்றார்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

ஆம்புலன்ஸ்களுக்கு இணையான உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் பல அக்காரில் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வெண்டிலேட்டர்கள் அதில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வசதிகள் கொண்ட காரையே பட்டுக்கோட்டையின் பல்வேறு கிராமப்புற மக்களுக்காக அவர் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இச்சேவையை அவர் முழுக்க முழுக்க இலவசமாக செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எதற்காகவும் யாரிடத்திலும் அவர் கட்டணம் வசூலிக்கவில்லை என தெரிகின்றது. தற்போது இந்த சேவையில் ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலும் சில ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்ட கார்களை களமிறக்க அவர் திட்டமிட்டிருக்கின்றார்.

கிராம மக்களுக்காக விலையுயர்ந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்... அவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொடிய நோய் தொற்றின் காரணமாக இளம் வயதிலேயே பலியானோர் எண்ணிக்கை ஏராளம். தற்போது இவ்வைரஸ் அதிக வேகத்துடன் பரவி வருகின்றது. இந்த வேகத்தை குறைக்கும் வகையில் மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் வைரஸ் பரவலின் வேகம் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Congress Leader K Mahendran Converts Kia Seltos SUV Car Into Ambulance. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X