கார் மீது பயணித்த பாம்பு! அழையா பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?..

அழையா பயணியாக கார் மீது வந்த பாம்பை இளம் ஜோடிகள் விநோதமாக விரட்டிய வீடியோ வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

பொதுவாக பாம்புகளை அதிகளவில் நீர் நிலைகளிலேயே அதிகம் காண முடியும். இங்கே அவற்றிற்கான உணவுகள் அதிகம். தொடர்ந்து, மர பொந்துகள் மற்றும் பாறை இடுக்குகளையும் அவை தங்களுக்கான குடியிருப்புகளாக மாற்றிக் கொள்கின்றது. இதுதவிர, சில நேரங்களில் இவற்றை மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் நம்மால் காண முடியும்.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

அவ்வாறு, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகள் சில தங்களுக்கான புதிய இருப்பிடங்களாக வாகனங்களை தேர்வு செய்துவிடுகின்றன. வாகனங்களின் எஞ்ஜின் மற்றும் ஹெட்லைட் போன்ற சில பாகங்கள் மிதமான வெப்ப நிலையில் இருப்பதனால் அந்த பகுதிகளை தேர்வு அவை தஞ்சமடைந்துவிடுகின்றன.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

அவ்வாறு, உரிமையாளர்களுக்கே தெரியாமல் தஞ்சமடைந்த பாம்புகளால் பாதிப்படைந்தவர்கள் பலர். இதேபோன்று, கண்களுக்கு புலப்படாத இடங்களில் புகுந்து உயிரை பலி கொடுத்த பாம்புகளும் பல. இந்நிலையில், அழையா பயணியாக காரின் பானட்டின் மீதிருந்த பாம்பை காரின் உரிமையாளர்கள் வைப்பரைக் கொண்டு விரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

பொதுவாக, வாகனங்களுக்குள் அழையா விருந்தாளியாக புகும் பாம்புகள் எஞ்ஜின் பகுதி அல்லது வெளிச்சமே புகா இடங்களுக்குள் நுழைந்துவிடுவதே வழக்கம். ஆனால், இங்கு இப்பாம்பு பான்னெட் வழியாக விண்ட் ஸ்கிரீன் மேலை ஏறியிருக்கின்றது. அதனை எப்படி வெளியேற்றுவது என தெரியாமல் காருக்குள் இருந்தவர்கள் வைப்பரை போட்டு அகற்றுகின்றனர்.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

ஆனால், அப்பாம்போ போக மாட்டேன் என அடம்பிடித்து காரின் பிற பகுதிகளுக்கு செல்வதை நம்மால் காண முடிகின்றது. அதேநேரத்தில் காருக்குள் இருந்தவர்கள் பாம்பை அகற்ற வேறு வழியை தேடாமல் வைப்பரை அகற்ற முயன்றனர். இந்த செயல் பாம்பை மேலும் அலைக்கழிக்கும் வகையில் அமைந்தது. தொடர்ந்து, பாம்பை அந்த பக்கம்-இந்த பக்கம் எனவும் புரட்டிப்போடச் செய்தது.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

வெறும், 20 செகண்டுகள் மட்டுமே அடங்கிய இந்த வீடியோ காட்சி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றது. கடைசியாக பாம்பு அகற்றப்பட்டதா என்பது பற்றிய விபரம் வீடியோவில் இல்லை. அவர்கள் காரை ஓட்டியவாறே பாம்பை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன் மீதிருந்த அச்சத்தின்காரணமாக இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

ஆஸ்திரேலியா நாட்டிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மெலிஸா ஹூட்சன் மற்றும் ராட்னி க்ரிக்ஸ் ஆகியோரே காரில் பயணித்தவர்கள் ஆவார்கள். இவர்கள் குரியர்-மெயில் எனும் தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நாங்கள் காரை நிறுத்தி வெளியேற நினைத்தோம். ஆனால், பாம்பு காருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சம் எங்களை தடுத்துவிட்டது. ஆகையால்தான் வைப்பர் வாயிலாக பாம்பை தள்ளிவிட முயற்சித்தோம்" என்றனர்.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

இந்த வைரல் வீடியோவை பார்த்த சிலர், "பாம்பு காரில் இருப்பதை பார்த்த பின்னர், தங்களால் இயலவில்லை என்றாலும் பிறரின் உதவியை நாடி பாம்பை அகற்றியிருக்கலாம். இல்லையெனில், படம் பிடிக்க பயன்படுத்திய செல்போனை பயன்படுத்தி காவலர்கள் அல்லது வனத்துறையினர் உதவிக்கு அழைத்திருக்கலாம். மாறாக, பாம்பை துன்புறுத்தும் வகையில், காரை அதி-வேகமாக இயக்கிக் கொண்டே வைப்பரை பயன்படுத்தியிருக்கின்றனர்.

கார் மீது பயணித்த பாம்பு! அழைய பயணியால் அதிர்ந்துபோன இளம் ஜோடி... பாம்பை விரட்ட என்ன செஞ்சாங்க தெரியுமா?

இளைஞர்களின் இந்த செயல் விலங்கு வதைப்பிற்கு இணையானதாகும்" என கருத்து தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து, இவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை ஏதேனும் ஒன்றை நிச்சயம் வழங்க வேண்டும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது போன்று வரும் அழையா விருந்தாளிகளை நம்முடைய வாகனத்திடம் இருந்து விலக்கி வைக்க, வாகனங்களை முழுமையாக கவர் செய்யக் கூடிய போர்வை அல்லது பாதுகாப்பான வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே இத்தகைய பயணிகளை நம்மிடம் இருந்து விலக்கி வைக்க முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Couple Tries To Remove Snake With The Windshield Wiper. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X