Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்! உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்!

அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான Volkswagen Taigun மிட்-சைஸ் எஸ்யூவி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைகுன் (Taigun) காரை நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் நடுத்தர எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த கார் இரு விதமான ட்ரிம்களில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

டைனமிக் லைன் (Dynamic Line) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் (Performance Line) ஆகிய இரு விதமான ட்ரம்களிலேயே டைகும் கிடைக்கும். ஒவ்வொரு ட்ரிம்மிலும் பல தரப்பட்ட தேர்வுகளை ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கின்றது. அவை யாவை மற்றும் அவற்றின் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

டைனமிக் லைன் (Dynamic Line):

டைனமிக் லைன் ட்ரிம்மில் கிடைக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுன், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த ட்ரிம்மில் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு விதமான 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும், ஒற்றை 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்விலும் அது கிடைக்கும்.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

அவை:

கம்ஃபோர்ட் லைன் (Comfortline)

விலை - ரூ. 10.50 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)

அனைத்து தேர்வுகளைக் காட்டிலும் மிக மிக ஆரம்ப நிலை தேர்வாக இது இருக்கின்றது. ஆகையால், பிற தேர்வுகளைக் காட்டிலும் சற்று குறைவான அம்சங்களே இதில் இடம் பெற்றிருக்கும். குரோம் பூச்சுக் கொண்ட க்ரில், முன் மற்றும் பின் பக்கத்தில் டிஃப்யூசர், எல்இடி டிஆர்எல்கள் உடன் கூடிய ஹாலோஜென் ஹெட்லேம்ப், கருப்பு நிற ரூஃப் ரெயில், எல்இடி இன்டிகேட்டர் உடன் கூடிய எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம்கள், 16 இன்ச் வீல் மற்றும் இன்ஃபினிட்டி எல்இடி வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவை இந்த தேர்வில் இடம் பெற்றிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

இத்துடன், இரு நிறங்கள் கொண்ட இருக்கைகள், பின் பக்கத்திற்கு ஏசி, பன்முக பொத்தான்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மேனுவல் ஏசி, 7 இன்சிலான தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), ஆறு ஸ்பீக்கர்கள் ஆகிய அம்சங்கள் இக்காரின் உட்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை ஃபோக்ஸ்வேகன் டைகுன் கம்ஃபோர்ட் லைன் தேர்வில் வழங்கப்பட்டுள்ளன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

ஹைலைன் (Highline)

விலை - ரூ. 12.80 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்), ரூ. 14.10 லட்சம் (தானியங்கி டிரான்ஸ்மிஷன்)

மேலே பார்த்த தேர்வைக் காட்டிலும் சற்று அதிக சிறப்பு அம்சங்கள் கொண்ட தேர்வாக ஹைலைன் வேரியண்ட் காட்சியளிக்கின்றது. எனவேதான் கம்ஃபோர்ட் லைனைக் காட்டிலும் இதன் விலை சற்று அதிகமாகவும் இருக்கின்றது. இதில், குரோம் பூச்சுக் கொண்ட பம்பர், பனி மின் விளக்கு, வெள்ளி நிற ரூஃப் ரெயில், 16 இன்சிலான பெல்மோன்டே அலாய் வீல், பின் பக்கத்தில் வைப்பர் வசதி, வாஷர் மற்றும் டிஃபாக்கர் (washer and defogger), கண்ணாடி ரக கருப்பு நிற கேபின், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

இத்துடன், 10 இன்சிலான தொடுதிர இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), ஒயர்லெஸ் சார்ஜிங், டச் வசதிக் கொண்ட தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், 60:40 ஸ்பிளிட் இருக்கை, வெள்ளை ஆம்பிசியன்ட் மின் விளக்கு, பின் பகுதியில் பார்சர் ட்ரே, முன் மற்றும் பின் பக்கத்தில் இரட்டை யுஎஸ்பி சி ரக சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகளும் ஹைலைன் தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

இத்துடன், மை ஃபோக்ஸ்வேகன் டெலிமேட்டிக் வசதி, கூல்டு குளோவ் பாக்ஸ் மற்றும் கோப்பைகளைத் தாங்கக் கூடிய ஆர்ம்ரெஸ்ட் பின் பக்கத்தின் மையப் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட இதில் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் பேடில் ஷிஃப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

டாப்லைன் (Topline)

விலை - ரூ. 14.57 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்), ரூ. 15.91 லட்சம் (தானியங்கி டிரான்ஸ்மிஷன்)

டைனமிக் லைனில் விற்பனைக்குக் கிடைக்கும் உயர் நிலை ஃபோக்ஸ்வேகன் டைகுன் தேர்வாக டாப்லைன் இருக்கின்றது. எனவேதான் மேலே பார்த்த இரு தேர்வுகளைக் காட்டிலும் பல மடங்கு உயர்வான விலையைக் கொண்டதாக இது காட்சியளிக்கின்றது. இந்த டாப்லைன் வேரியண்டில் 3டி குரோம்ம பூச்சு கொண்ட க்ரில், டிஆர்எல்கள் உடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப், குரோம் பூச்சுக் கொண்ட கதவுகள் மற்றும் விண்டோ லைன்கள், 17 இன்சிலான கேஸினோ அலாய் வீல்கள், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

தொடர்ந்து, மிக சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்காக பக்கவாட்டு பகுதிக்கும் ஏர் பேக் வசதி, டயர் பிரஷ்ஷர் டெஃப்லேஷனந் வார்னிங், தானாக டிம்மாக உட்பக்க பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி, தானியங்கி ஹெட்லேம்ப், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர், 8 இன்சிலான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, சன்ரூஃப் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை ஆகிய அதிக சிறப்பு வசதிகள் டாப்லைனில் இடம் பெற்றிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

பெர்ஃபார்மன்ஸ் லைன் (Performance line)

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பெர்ஃபார்மன்ஸ் லைனில் கிடைக்கும் அனைத்து தேர்வுகளும் அதிக பிரீமியம் தர வசதிகள் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. ஜிடி (GT) மற்றும் ஜிடி ப்ளஸ் (GT Plus) என்ற இரண்டு விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும். அதிக திறன் மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்டவையாகவும் இத்தேர்வுகள் காட்சியளிக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே பெர்ஃபார்மன்ஸ் லைன் டைகுன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், சிலிண்டர் டீஆக்டிவேஷன் தொழில்நுட்பம் வழக்கமான வசதியாக வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதில், ஜிடி வேரியண்டில் 6 ஸ்பீடு மேனுவல் எஞ்ஜின் தேர்வும், ஜிடி ப்ளஸ் தேர்வில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படுகிறது.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

ஜிடி (GT)

விலை - ரூ. 15 லட்சம் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)

இந்த வேரியண்ட்டில் காணப்படும் நிலையான அம்சங்கள்; முன் பக்கத்தில் ஜிடி என்ற எம்பளம் பொருந்திய கிரில், பூட் லிட் மற்றும் முன்பக்கத்தில் ஃபெண்டர்கள், எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய ஹாலோஜன் முகப்பு மின் விளக்கு, க்ரோம்-ஃபினிஷ் கொண்ட மேல் மற்றும் அடிப்பகுதி கிரில், 16 இன்சிலான பெல்மோன்டே அலாய் வீல்கள், இன்ஃபினிட்டி எல்இடி டெயில் மின் விளக்குகள், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் செர்ரி சிவப்பு நிற தையல் உடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

சிவப்பு சுற்றுப்புற மின் விளக்கு, பின்புறத்திற்கான ஏசி துவாரங்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன் மற்றும் பின்புறத்தில் இரட்டை யுஎஸ்பி சி ரக சார்ஜிங் சாக்கெட்டு, 'மை வோக்ஸ்வாகன்' டெலிமாடிக்ஸ் வசதி, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கக்கூடிய ஓஆர்விஎம்-கள் ஆகியைவையும் இந்த தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றன. கம்ஃபோர்ட் லைனில் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்களே இந்த தேர்விலும் இடம் பெற்றிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

ஜிடி ப்ளஸ் (GT Plus)

விலை - ரூ. 17.50 லட்சம் (டிஎஸ்ஜி)

ஜிடி ப்ளஸ் அதிகம் வசதிகள் மற்றும் மிக அதிக விலைக் கொண்ட தேர்வாக இது காட்சியளிக்கின்றது. மேலே பார்த்த அனைத்து தேர்வுகளைக் காட்டிலும் மிக அதிக சிறப்பம்சங்களை இது கொண்டிருக்கின்றது. ஆகையால், மற்ற வேரியண்டுகளில் இடம் பெறாத பல சிறப்பு அம்சங்களை இந்த தேர்வின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

தானியங்கிய ஹெட்லேம்ப், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, சன்ரூஃப், ஹெண்டிலேட்டட் இறுக்கைகள், ஆட்டோ டிம்மிங் உட்பக்க கண்ணாடி, பக்கவாட்டு ஏர் பேக், ட்யூவல் டோன் பெயிண்ட் ஆப்ஷன், குரோம் பூச்சு பிடிகள் கொண்ட கதவு, பேடில் ஷிஃப்டர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், 3டி குரோம் ஸ்டெப் கிரில், அலுமினியம் பெடல் மற்றும் சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் ஆகியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்... உங்களுக்கு பொருத்தமானது எதுனு நீங்களே தேர்வு செய்யலாம்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் நடுத்தர எஸ்யூவி காரின் விலை பட்டியல்:

Volkswagen Taigun Price
Comfortline MT ₹10,49,900
Highline MT ₹12,79,900
Highline AT ₹14,09,900
Topline MT ₹14,56,900
Topline AT ₹15,90,900
GT MT ₹14,99,900
GT Plus DSG ₹17,49,900

More from DriveSpark

Article Published On: Friday, September 24, 2021, 15:14 [IST]
English summary
Creta rival volkswagen taigun suv variants explained
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+