MG HectorPlus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்! வாங்கியவர விடுங்க காரோட விலை என்ன தெரியுமா?

முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் புத்தம் புதிய MG Hector Plus எஸ்யூவி ரக காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

MG நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் Hector Plus-ம் ஒன்று. இந்த காரையே பிரபல முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனில் கவாஸ்கர் இவரே இந்த காரை வாங்கியவர் ஆவார். இவர் தற்போது கிரிக்கெட் அட்மின் மற்றும் வர்ணனையாளராக பணியாற்றி வருகின்றார்.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இவரே தற்போது தனக்கான புதிய பயணங்களுக்காக MG Hector Plus எஸ்யூவி ரக காரை வாங்கியிருக்கின்றார். கேன்டீ வெள்ளை எனப்படும் கருப்பு நிறத்திலான மேற்கூரைக் கொண்ட Hector Plus காரையே அவர் வாங்கியிருக்கின்றார். இது ஓர் ஆறு இருக்கைகள் வசதிக் கொண்ட கார் மாடலாகும். ஆனால், என்ன வேரியண்டை அவர் தற்போது வாங்கியிருக்கின்றார் என்பது தெளிவாக தெரியவில்லை.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

ஆகையால், சுனில் கவாஸ்கர் வாங்கியிருக்கும் MG Hector Plus எஸ்யூவி காரின் துள்ளியமான விலை பற்றிய தகவல் தெரியவில்லை. இருப்பினும், இந்த கார் தற்போது இந்தியாவில் ரூ. 13.96 லட்சம் தொடங்கி ரூ. 19.94 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த உச்சபட்ச விலைக் கொண்ட காரையே கிரிக்கெட் வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர் வாங்கியிருக்கின்றார்.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்த கார் இந்திய சந்தையில் பல கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. அந்தவகையில், Mahindra XUV 500, Tata Safari, Hyundai Alcazar, Toyota Innova Crysta மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான Mahindra XUV 700 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக MG Hector Plus விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

MG Hector Plus வழக்கமான MG Hector காரைக் காட்டிலும் சற்று நீளமான காராக காட்சிளிக்கின்றது. அந்தவகையில் 4,720 மிமீ நீளத்தைக் கொண்டிருக்கின்றது. இது Hector ஐக் காட்டிலும் 65 மிமீ அதிகம் ஆகும். மற்றபடி, அகலம் உயரம் மற்றும் வீல்பேஸ் ஆகியவற்றில் இரு கார்களும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

Hector Plus ஆறு அல்லது ஏழு இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் ஆறு இருக்கை தேர்வு சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய வேரியண்டுகளிலும், ஏழு இருக்கைத் தேர்வு ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் செல்க்ட் ஆகிய வேரியண்டுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

எஞ்ஜின்; பெட்ரோல் எஞ்ஜின், மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வையும் MG Hector Plus காரில் வழங்குகின்றது. தொடர்ந்து, பன்முக கியர்பாக்ஸ் தேர்வையும் இந்த காரில் நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

சிறப்பம்சங்கள்; இந்த விஷயத்தில் சிறப்பு வசதிகளை தாங்கியிருக்கும் மிக பெரிய காராக இது காட்சியளிக்கின்றது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அனலாக் மற்றும் டிஜிட்டல் பன்முக தகவல்களை வழங்கும் திரை, ஆம்பிசியன்ட் மின் விளக்கு, பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரானிக் டெயில்கேட், தானியங்கி முகப்பு மின் விளக்கு, மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர்க்ள் மற்றும் எலெக்ட்ரானிக் அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கை என சிறப்பு வசதிகள் இக்காரில் வாரிவழங்கப்பட்டுள்ளன.

MG Hector Plus காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... அவரு யாருன்றத விடுங்க காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இத்துடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 26.4 சென்டிமீட்டர் அளவிலான தொடுதிரை, இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், சப் ஊஃபர் மற்றும் ஆம்பிளிஃபையர், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள் என இன்னும் பல மதிப்புக்கூட்டப்பட்ட அம்சங்கள் MG Hector Plus காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை, ஆரம்ப நிலை மற்றும் உயர் நிலை தேர்வுகளுக்கு ஏற்ப மாறுபட்டு காணப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cricked administrator and commentator sunil gavaskar buys mg hector plus suv
Story first published: Tuesday, August 24, 2021, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X