உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

உலகின் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என்று பார்த்தால் நிச்சயம் அதில் டைம்லர் நிறுவனமும் ஒன்றாக இருக்கும். ஜெர்மனியை சேர்ந்த இந்த நிறுவனம் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு விதமான பெயர்களில் செயல்பட்டு வருகிறது.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

மேலும் டைம்லர் தான் உலகிலேயே முதல் நிறுவனமாக கமர்ஷியல் பயன்பாட்டிற்கான ட்ரக் வாகனத்தை தயாரித்து விற்பனை செய்துள்ளது. உலகளவில் பிரபலமான, பழங்கால பொறியியலாளரான கோட்லீப் டைம்லர் தான் உலகின் முதல் ட்ரக்கை வடிவமைத்துள்ளார்.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

முதல் உள் எரிப்பு என்ஜினை உருவாக்கியவரும் கோட்லீப் டைம்லர் தான் என்பது கூடுதல் தகவல். ஆரம்பத்தில் இவர் உருவாக்கிய ட்ரக் வாகனங்களில் அடிப்படையில் தான் அதன்பின் டைம்லர் நிறுவனம் தனது முதல் ட்ரக்குகளை 1920-30களில் விற்பனைக்கு கொண்டுவந்தது.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

கோட்லீப் டைம்லரின் முதல் ட்ரக்கில் 1.06 லிட்டர் 2-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த என்ஜின் லிட்டருக்கு 16.66கிமீ மைலேஜ் தரக்கூடியதாக இருந்தது. இதுவே கோட்லீப்பின் புகழை உலகம் முழுக்க அந்த சமயத்தில் பரப்பியது.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

அதிகப்பட்சமாக 4 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இதன் என்ஜின் இருந்தது. இந்த ஆற்றல் வாகனத்தின் பின் சக்கரங்களுக்கு செல்ல பெல்ட்-ட்ரைவன் இயந்திரநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

நம்மூர் மாட்டிவண்டி போல் தோற்றமளிக்கும் இந்த ட்ரக்கில் என்ஜின் பின் சக்கரங்களுக்கு இடையே பொருத்தப்பட்டுள்ளது. அதிர்வுகளை அதிகம் வெளிக்காட்டக்கூடியதாக இருந்த இந்த ட்ரக்கின் என்ஜினை பாதுக்காக்கும் விதத்தில் சுருள்கள் வழங்கப்பட்டன.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

வலிமையான இரும்பு சக்கரங்களில் டயர்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. முன்பக்க சக்கரங்களை ஸ்டேரிங் சக்கரத்தின் உதவியுடன் திருப்புவதற்கு சங்கிலி உபயோகப்படுத்தப்பட்ட முதல் ட்ரக் வாகனமும் இதுதான் என டைம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

தான் உருவாக்கிய ட்ரக்கை அப்கிரேட் செய்ய 1898ல் கோட்லீப் டைம்லர் மற்றொரு ஆட்டோமொபைல் முன்னோடியான வில்ஹெல்ம் மேபாக் உடன் இணைந்தார். இந்த கூட்டணியில் தான் தற்போதைய ட்ரக்குகளில் உள்ளதை போல் என்ஜின் வாகனத்தின் முன் சக்கரங்களுக்கு இடையே கொண்டுவரப்பட்டது.

உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!!

இதனால் 1898ஆம் ஆண்டிலேயே வித்தியாசமான முன்பக்கத்துடன் கோட்லீப் டைம்லரின் ட்ரக் அப்கிரேட் செய்யப்பட்டது. அதன்பின் உலகின் முதல் ட்ரக்கின் தோற்றம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மெருக்கேற்றப்பட்டன.

இந்த வகையில் பழைய 1.06 லிட்டர் 2-சிலிண்டர் என்ஜின் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2.2 லிட்டர் என்ஜினை இந்த ட்ரக்கில் வழங்கினர். இந்த என்ஜினில் போஸ்ச் நிறுவனத்தின் இக்னிஷன் மற்றும் வெப்பத்தை தணித்து குளிர்விப்பான் சிஸ்டங்கள் பொருத்தப்பட்டன.

Most Read Articles
English summary
World's first-ever truck in 1896 had a mileage of 16.66 kmpl, claims Daimler. Read All Details In Tamil.
Story first published: Tuesday, April 13, 2021, 2:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X