டட்சன் கார்களுக்கு ரூ.40,000 தள்ளுபடி... ஆஃபர் பற்றிய முழு விபரம்!
பட்ஜெட் விலையில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டட்சன் கார்களுக்கு சிறப்பு சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையால் கார் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக, டட்சன் கார் நிறுவனம் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. டட்சன் கோ, கோ ப்ளஸ் மற்றும் ரெடிகோ கார்களுக்கு சேமிப்பு மற்றும் தள்ளுபடியை பெற முடியும். அதிகபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டட்சன் ரெடிகோ
டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.35,000 வரையில் அதிகபட்சமாக சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், பழைய காரை மாற்றி புதிய டட்சன் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெற முடியும்.

மேலும், டட்சன் ரெடிகோ காரை ஆன்லைனில் புக்கிங் செய்து வாங்குவோருக்கு ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியும் பெற முடியும். மேலும், 3 மாதங்களுக்கு பின்னர் மாதத் தவணையை செலுத்தும் வகையில் சிறப்பு கடன் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ கார் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. புதிய டட்சன் ரெடிகோ கார் ரூ.3.97 லட்சம் முதல் ரூ.4.95 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டட்சன் கோ
டட்சன் கோ காருக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெற முடியும். இந்த கார் ரூ.4.02 லட்சம் முதல் ரூ.6.51 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்தியாவின் குறைவான விலை கொண்ட சிவிடி கியர்பாக்ஸ் மாடலாகவும் இதனை குறிப்பிடலாம்.

டட்சன் கோ ப்ளஸ்
டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி காருக்கு ரூ.40,000 மதிப்புடைய தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கும் ரூ.20,000 விலையில் நேரடி தள்ளுபடியும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் வழங்கப்படுகிறது. ரூ.4.25 லட்சம் முதல் ரூ.6.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. சிவிடி மாடல்கள் செயல்திறன் சற்று கூடுதலாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

வரும் ஜூன் 30ந் தேதி வரை புதிய டட்சன் காரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதுகுறித்த விரிவான விபரங்களை அருகாமையிலுள்ள டட்சன் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








