டட்சன் கார்களுக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி!
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டட்சன் கார்களுக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கார் விற்பனையை அதிகரிக்க டட்சன் நிறுவனம் தொடர்ந்து தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான சலுகை விபரங்களை டட்சன் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.40,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டட்சன் ரெடிகோ
டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.34,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில், ரூ.15,000 விலையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் போனஸ் சலுகையாகவும் பெறலாம்.

இந்த காரில் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதன் 800சிசி எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.0 லிட்டர் எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டட்சன் கோ
டட்சன் கோ காருக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. விலையில் ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டட்சன் கோ ப்ளஸ்
டட்சன் கோ ப்ளஸ் காருக்கும் ரூ.40,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு உள்ளது. ரூ.20,000 வரை தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும்.

டட்சன் கோ மற்றும் டட்சன் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

வரும் 26ந் தேதி வரை புதிய டட்சன் காரை முன்பதிவு செய்வோர் இந்த தள்ளுபடி சலுகைகளை பெற முடியும். அதேநேரத்தில், ஊர் மற்றும் டீலருக்கு தக்கவாறு இந்த சேமிப்புச் சலுகைகளில் வேறுபாடு இருக்கும் என்று டட்சன் தெரிவித்துள்ளது. எனவே, அருகிலுள்ள டட்சன் டீலரை தொடர்பு கொண்டு அதிக விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








