ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக விரைவில் பல்வேறு அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டிற்குள், மொத்த வாகன விற்பனையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு 25 சதவீதமாக இருக்க வேண்டும் என அம்மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

இந்த இலக்கை அடைவதற்காக, இ-காமர்ஸ் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் கேப் நிறுவனங்கள் ஆகியவற்றிடம், முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும்படி டெல்லி மாநில அரசு கேட்டு கொள்ளவுள்ளது. அதேபோல் பியூசி சர்டிபிகேட் (PUC - Pollution Under Control Certificate) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப கூடாது எனவும் பெட்ரோல் பங்க் நிர்வாகங்களிடமும் டெல்லி அரசு கேட்டு கொள்ளவுள்ளது.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

இதுகுறித்து டெல்லியை சேர்ந்த அரசு அதிகாரிகள் கூறுகையில், ''காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக 2 முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க போகிறோம். முதலாவதாக ஓலா, உபேர், ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற நிறுவனங்களிடம் முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும்படி கேட்டு கொள்ளவுள்ளோம்.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

இவர்களின் வாகனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. எனவே இந்த நிறுவனங்கள் முற்றிலுமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறினால், காற்று மாசுபாடு பிரச்னை குறையும். அதேபோல் பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு உத்தரவிடுவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றனர்.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் நடப்பு வாரத்திலேயே பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப கூடாது என்ற உத்தரவை எளிமையாக அமல்படுத்தலாம். ஆனால் ஓலா, உபேர், ஸ்விக்கி மற்றும் ஜொமோட்டோ போன்ற நிறுவனங்களை உடனடியாக முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைப்பது சற்று சிரமமான விஷயம்.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

எனவே இதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''படிப்படியாகதான் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும்'' என்றனர். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் அமைப்பதற்கும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

டெல்லி மாநில அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இதன்படி வரும் 2024ம் ஆண்டிற்குள் மொத்த வாகன விற்பனையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு 25 சதவீதம் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக வரும் மாதங்களில் டெல்லி அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

முன்னதாக பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்கள் மீது டெல்லி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் சுமார் 500 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுவினர், பெட்ரோல் பங்க்குகளில், வாகனங்களின் பியூசி சர்டிபிகேட்களை பரிசோதிக்கும் பணியை செய்தனர்.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

முறையான பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகளால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். அல்லது சில சமயங்களில் இரண்டு தண்டனைகளையும் சேர்த்து விதிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதற்கு சட்டத்தில் இடமுள்ளது.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. அதே நேரத்தில் உலகில் மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் டெல்லி உள்ளது. எனவே டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து கொண்டுள்ளது.

ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக டெல்லியில் வரும் காலங்களில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என நம்பலாம். எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் டெல்லி அரசு ஊக்குவித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Delhi government to ask ola uber swiggy zomato to completely switch to electric vehicles
Story first published: Tuesday, December 28, 2021, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X