டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

டாடா நெக்ஸான் இவி கார் வாங்குவோருக்கான மானியத்தை டெல்லி அரசாங்கம் நிறுத்தியதை அடுத்து, இது தொடர்பான டெல்லி உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கத்தின் சான்றிதழிலில் இருந்து ரியல்-வேர்ல்டு ரேஞ்ச் வரையில் வெவ்வேறு விதமான குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து டெல்லி அரசாங்கம் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அளித்துவந்த மானியத்தை நிறுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த டாடா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு ஒன்றை அளித்தது.

டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

இதனை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தால் சான்றழிக்கப்பட்டதற்கு இணங்க நெக்ஸான் இவி காரின் ரேஞ்ச் 300கிமீ என டாடா மோட்டார்ஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் கார் தயாரிப்பாளர் மானியத்திற்கு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

டெல்லி அரசாங்கத்தின் தகுதிவாய்ந்த வாகனங்களின் பட்டியலில் இருந்து நெக்ஸான் இவி கார் நீக்கப்பட்டதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

மேலும், டெல்லி அரசாங்கம் இதுதொடர்பான தனது எதிர் வாக்குமூலத்தை அளிக்க டெல்லி ஹைகோர்ட் நேர அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே கூறியதுபோல் டாடா நெக்ஸான் இவி காரின் ரேஞ்ச் (100- 0% சார்ஜில் அதிகப்பட்சமாக செல்லக்கூடிய தூரம்)-இன் மீது பல்வேறு புகார் வெளிவந்ததை அடுத்துதான் இந்த எலக்ட்ரிக் காரின் மீது டெல்லி அரசாங்கம் தனது குற்றச்சாட்டை வைத்துள்ளது.

டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

இதற்கு ஒரு உதாரணமாக, டெல்லி நாஜாப்கர் பகுதியை சேர்ந்த நெக்ஸான் இவி காரின் வாடிக்கையாளர் ஒருவர், அங்கரீக்கப்பட்ட நிறுவனத்தின் டீலர் அறிவுறுத்திய அனைத்து ஓட்டுநர் நடைமுறைகளை பின்பற்றி பார்த்த பின்னரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்த ரேஞ்சை என்னால் பெற முடியவில்லை என தெரிவித்து இருந்தார்.

டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

மலிவான வாகனங்களின் விலைகளினால் டெல்லி எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மிகவும் உகந்த நகரமாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்களை வலியுறுத்தும் விதமாக மானியங்கள் மற்றும் சாலை வரி & வாகன பதிவு இலவசம் போன்ற சலுகைகளை டெல்லி அரசாங்கம் அறிவித்து வழங்கி வருகிறது.

டெல்லியில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் மீது வரும் அடுத்தடுத்த புகார்கள்!! ஹைகோர்ட் வரை சென்ற பிரச்சனை...

இப்படிப்பட்ட நகரத்தில் நெக்ஸானிற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டது உண்மையில் டாடா மோட்டார்ஸை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. டாடா நிறுவனமும் நெக்ஸானின் ரேஞ்ச் குறைய வாய்ப்பே இல்லை என்றெல்லாம் கூறவில்லை, இவி வாகனங்களின் ரேஞ்ச் பல்வேறு விதமான காரணங்களால் சிறிது குறைய தான் செய்க்கின்றன என்றே கூறுகிறது. இந்த காரணங்களில் மோசமான சாலை, காற்று மாசாக்கப்பட்ட சுற்றுச்சூழல் உள்பட ஏகப்பட்டவைகளை சொல்லலாம்.

Most Read Articles

English summary
Delhi government suspends subsidy on Tata Nexon EV. Delhi HC grants interim relief over delisting of Tata Nexon EV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X