வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் டெல்லி முன்னுதாரணமாக திகழ்கிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டெல்லியில் முழுவதுமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாறிய முதல் அரசு அமைப்பு என்ற பெருமையை டெல்லி மாசு கட்டுப்பாடு கமிட்டி தற்போது பெற்றுள்ளது. டெல்லி எலெக்ட்ரிக் வாகன கொள்கை-2020ன் படி, டெல்லி அரசின் அனைத்து துறைகளும் குத்தகை முறை மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும்.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இதன்படி டெல்லி மாசு கட்டுப்பாடு கமிட்டி தற்போது முழுவதுமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி அசத்தியுள்ளது. டெல்லி மாசு கட்டுப்பாடு கமிட்டி, 29 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. குத்தகை காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன் மூலம் டெல்லியில் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிய முதல் அரசு அமைப்பு என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இதுதவிர கூடுதலாக 5 எலெக்ட்ரிக் கார்கள் விரைவில் குத்தகைக்கு எடுக்கப்படவுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும். கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீஸ் லிமிடெட், இந்த எலெக்ட்ரிக் கார்களை வழங்கவுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து இந்த எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இதுகுறித்து டெல்லி அதிகாரிகள் கூறுகையில், ''இந்த நடவடிக்கை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு மக்களை ஊக்குவிப்பதாக இருக்கும்'' என்றனர். மேலும் சுற்றுச்சூழல் துறையும் வெகு விரைவில் 20 முதல் 25 எலெக்ட்ரிக் கார்களை குத்தகைக்கு எடுக்கவுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதன் மூலமாக சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த முடியும்.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்க முடியும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு மிகவும் முக்கியமானது.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டெல்லியில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு அம்மாநில அரசு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வரும் 2024ம் ஆண்டிற்குள், டெல்லியில் பதிவு செய்யப்படும் மொத்த வாகனங்களில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு 25 சதவீதம் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்த இலக்கை எட்டுவதற்காக சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாக டெல்லி உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை வெகுவாக அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

வேற லெவல்... மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழும் டெல்லி... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டெல்லி மாசு கட்டுப்பாடு கமிட்டி தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles

English summary
Delhi Pollution Control Committee Becomes 1st Government Body To Completely Switch To EVs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X