பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில கார்களுக்கு 2021 ஜனவரி மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

ஹூண்டாய் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் கவர்ச்சிகரமான சலுகைககளை இந்த மாதத்தில் வழங்கவுள்ளனர். இந்த சிறப்பு சலுகைகளில் பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

கோனா எலக்ட்ரிக்

ரூ.1.50 லட்சம் வரையிலான பணம் தள்ளுபடியை ஹூண்டாயின் எலக்ட்ரிக் மாடலான மை2020 கோனா கார் பெற்றுள்ளது. அதாவது இந்த எலக்ட்ரிக் காரை இந்த ஜனவரி மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலான பணத்தை சேமிக்கலாம்.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.23.83 லட்சம் மற்றும் ரூ.24.07 லட்சமாக உள்ளன. 39.2 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் இந்த காரில் வழங்கப்படும் நிரந்தர காந்த ஒத்திசைவு மோட்டார் அதிகப்பட்சமாக 134 பிஎச்பி மற்றும் 395 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

அவ்ரா

அவ்ரா டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டை வாங்குவோர் ரூ.30,000 வரையிலும், அவ்ராவின் மற்ற வேரியண்ட்களை வாங்குவோர் ரூ.15,000 வரையிலும் பணத்தை சேமிக்கலாம். அவ்ராவின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸும் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

ரூ.5.86 லட்சத்தில் இருந்து ரூ.9.29 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாயின் காம்பெக்ட்-செடான் காரான அவ்ராவில் 1.2 லிட்டர் பெட்ரோல் & டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று என்ஜின்கள் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் & டீசல் என்ஜின்கள் மட்டும் கூடுதல் தேர்வாக 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸை பெறுகின்றன.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

சாண்ட்ரோ

சாண்ட்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ரூ.20,000 வரையிலான பணம் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸையும் ஹூண்டாய் வழங்கியுள்ளது. ஆனால் ஆரம்ப நிலை எரா வேரியண்ட் மட்டும் ரூ.10,000 வரையிலான பணம் தள்ளுபடியையே பெற்றுள்ளது.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

சாண்ட்ரோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.64 லட்சத்தில் இருந்து ரூ.6.32 லட்சம் வரையில் உள்ளன. 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வெர்சனிலும், சிஎன்ஜி வெர்சனிலும் வழங்கப்படுகிறது. இந்த இரு வெர்சனிலும் இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், பெட்ரோல் வெர்சனில் மட்டும் கூடுதல் தேர்வாக ஏஎம்டி கியர்பாக்ஸும் கொடுக்கப்படுகிறது.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

க்ராண்ட் ஐ10 நியோஸ்

க்ராண்ட் ஐ10 நியோஸின் டர்போ-பெட்ரோல் வேரியண்ட் ரூ.25,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் உடன் கிடைக்கும். இந்த ஹேட்ச்பேக்கின் மற்ற அனைத்து வேரியண்ட்களும் ரூ.5,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் உடன் விற்பனைக்கு கிடைக்கும்.

பொங்கலுக்கு ஹூண்டாய் கார்களை வாங்கலாம்!! பல ஆயிர ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்!

ரூ.5.13 லட்சத்தில் இருந்து ரூ.8.36 லட்சம் வரையில் விலையினை கொண்டுள்ள ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸில் 1.2 லிட்டர் ‘கப்பா' பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் யு2 சிஆர்டிஐ டீசல் என்ற இரு என்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் வழங்கப்படுகின்றன.

மற்றப்படி க்ரெட்டா, வென்யூ, வெர்னா, புதிய ஐ20 மற்றும் டக்ஸன் மாடல்களுக்கு எந்த சலுகையையும் இந்த மாதத்திற்கு ஹூண்டாய் அறிவிக்கவில்லை.

Most Read Articles

English summary
Discounts up to Rs 1.50 lakh on Hyundai Cars in January 2021
Story first published: Saturday, January 9, 2021, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X