தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

விபத்து சம்பவத்திற்கு காரணம் இதுதான் என காரின் உரிமையாளர் கூறிய தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

அஜாக்கிரதை மற்றும் ஏனோதானோ போக்கு ஆகியவையே விபத்திற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் வாகன ஓட்டிகளின் அடாவடித் தனமான (தவறான) வாகனம் ஓட்டும் செயலே பெரும்பாலான விபத்துகள் அரங்கேறுவதற்கு காரணமாக இருக்கின்றது.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

இதுவரை நாம் கண்ட மற்றும் கேட்ட விபத்துகள்குறித்த தகவலே இதற்கு சான்று. இந்த வரலாற்றை உடைக்கும் வகையில் ஓர் அரிய வகையிலான விபத்து சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது. ஆமாங், செல்லப் பிராணி ஒன்றால் அரங்கேறிய விபத்து சம்பவம்குறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

ஜீப் நிறுவனத்தின் சொகுசு கார் ஒன்று மோதியதன் காரணத்தினால் கலைக்கூடம் ஒன்றின் சுற்றுச் சுவர் லேசான இடிபாடுகளைச் சந்தித்திருக்கின்றது. வெவ்வேறு விதமான படைப்புகளின் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த விபத்து சம்பவத்திற்கு ஓர் நாய் மட்டுமே காரணம் என கூறப்படுகின்றது.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

அமெரிக்கா நாட்டின் விஸ்கான்சின் மிச்சிகன் ஏரியின் மேற்கு கரை பகுதியில் உள்ள மில்வாக்கி எனும் கிராமத்திலேயே இந்த விநோத விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த செய்தி அந்நாட்டில், மிக முக்கியமாக விஸ்கான்சின் மிச்சிகன் பகுதியில் தலைப்பு செய்தியாகவே மாறியிருக்கின்றது.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

இதற்கு, இச்சம்பவத்தில் நாய் ஒன்றை காரின் உரிமையாளர் காரணம் காட்டியிருப்பதே காரணமாக இருக்கின்றது. பொதுவாக, செல்லப்பிராணிகளை அதன் உரிமையாளர்கள் காரின் பின்னிருக்கையில் வைத்தே அழைத்து செல்லப்படுகின்றன. ஆனால், இந்த சம்பவத்தில் 'கேல்லீ' (Callie) எனப்படும் அந்த 5 வயது நாய் காரின் முன்பக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

இந்த நிலையிலேயே, கார் நிறுத்தப்பட்ட பின்னர் டிரைவிங் மோடை (கியரை) கேல்லீ, மாற்றியமைத்திருக்கின்றது. இதுவே இவ்விபத்து அரங்கேற முக்கிய காரணம் என டபிள்யூபே (WBAY) செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது. காரின் உரிமையாளர் கூறியதன் அடிப்படையில் இத்தகவலை செய்தி தளம் வெளியிட்டிருக்கின்றது.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

நல்ல வேலையாக இந்த விபத்து சம்பவத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. குறிப்பாக, அருங்காட்சியகத்தில் இருந்த அரிய வகைப் பொருட்கள் மற்றும் படைப்புகளும் எந்தவித பாதிப்புமின்றி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

ஆனால், கலைக்கூடத்தின் சுற்றுசுவர் விரிசல் போன்ற பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றது. அதேநேரத்தில், விலையுயர்ந்த ஜீப் காரின் முன்பகுதியும் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றது. நாயின் அறியாமையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இவ்விபத்து சம்பவம்குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தலைப்பு செய்தியாக மாறிய விபத்து சம்பவம்... உரிமையாளர் கூறிய காரணத்தால் மிரண்டுபோன நெட்டிசன்கள்...

Image Courtesy: The Pearl of Door County

விபத்து ஏற்பட்டதற்கு காரணமாகக் கூறப்படும் கேல்லீ (நாய்)-இன் புகைப்படமும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அப்பாவி போன்று காட்சியளிக்கும் இந்த நாய்மீதே விபத்து பழி போடப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dog Crashes Jeep Luxury Car Into An Art Gallery. Read In Tamil.
Story first published: Friday, March 26, 2021, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X