Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ மாசம் எதுக்குங்க?

டாடா மோட்டார் (Tata Motors) நிறுவனம் நேற்றைய தினம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தனது மின்சார கார்களுக்கு ஆறு மாதங்களும், பிற கார்களுக்கு இரண்டு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த திடீர் காத்திருப்பு காலம் அதிகரிப்பிற்கான காரணத்தை பற்றியே விரிவாக இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அதன் வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் இரண்டு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை நிலவுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலான காத்திருப்பு காலமும், பிற வாகனங்களுக்கு இரண்டு மாதங்கள் வரை காத்திருப்பு காலமும் சிப் பற்றாக்குறையால் ஏற்பட்டிருப்பதாக" அறிவித்திருக்கின்றது.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

ஆகையால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை இப்போது புக் செய்தால் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதேபோல், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு இரண்டு மாதங்கள் வரை புக் செய்த பின்னர் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

உலகளவில் நிலவும் சிப் (chips) பற்றாக் குறையே இந்திய வாகன உலகின் நிறுவனத்தின் இந்த நிலைக்கு காரணம் ஆகும். உலகளவில் சிப் பற்றாக் குறை தலைவிரித்தாடி வருகின்றது. டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி உலகின் முன்னணி நிறுவனங்களும்கூட இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டாடா மோட்டார்ஸும் தனது பாதிப்புகுறித்த தகவலை அறிவித்திருக்கின்றது. சிப் பற்றாக் குறையின் காரணமாக புதிய வாகனங்களின் உற்பத்தியை நிர்ணயித்த அளவிற்கு செய்ய முடியாமல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

இந்த நிலையால், புதிய வாகனங்களை புக் (முன் பதிவு) செய்தோருக்கு உரிய நேரத்தில் டெலிவரி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இத்தகைய ஓர் சிக்கலிலேயே இந்தியா வாகன உலகின் ஜம்பவானான டாடா மோட்டார்ஸ் தற்போது சிக்கியுள்ளது.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

கடும் சிப் பற்றாக்குறை காரணமாக நிறுவனத்தின் சொகுசு கார் உற்பத்தி யூனிட்டான ஜாகுவார் லேண்ட் ரோவரின் 1,25,000 வாகனங்களுக்கான ஆர்டர் பாதிக்கப்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துதள்ளது. நிறுவனம் தற்போது அதிகம் லாபம் தரும் வாகனங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கி வருகின்றது.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

அதேநேரத்தில் காத்திருப்பு நேரத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளில் முடிந்தளவு செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது உலகளவில் நிலவும் பிரச்னை என்பதால் சற்றே கடும் நெருக்கடியை நிறுவனம் சந்திக்கத் தொடங்கி இருக்கின்றது.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

இந்தியாவிலேயே மிகக் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே விற்பனைச் செய்து வருகின்றது. ஒட்டுமொத்த மின் வாகன விற்பனையில் நிறுவனத்தின் பங்கு 71 சதவீதமாக இருக்கின்றது. இது டாடாவின் மின்சார தயாரிப்புகளுக்கு கிடைத்து வரும் அபரீதமான வரவேற்பை வெளிக்காட்டுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சிப் பற்றாக்குறையில் டாடா சிக்கியுள்ளது.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மின்சார தயாரிப்பாக நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி உள்ளன. இதில், மிக மிக குறைந்த விலைக் கொண்ட எலெக்ட்ரிக்க காராக டிகோர் இவி இருக்கின்றது. இதன் வருகைக்கு முன்னர் வரை நாட்டின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக நெக்ஸான் இவி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

இக்கார் ரூ. 13,99,000 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்எம், எக்ஸ்இசட்-ப்ளஸ், எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன் கூடுதல் சிறப்பு தேர்வாக அடர் கருப்பு நிற தேர்வுகள் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் வழங்கப்படுகின்றது. இந்த தேர்வு எக்ஸ்இசட்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் ஆகிய இரண்டில் மட்டுமே கிடைக்கும்.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

டாடா நெக்ஸான் இவி-யை விட மிகக் குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக டிகோர் இவி இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்இசட்-பளஸ் மற்றும் எக்ஸ்இசட்-பளஸ் டிடி ஆகியவையே அவை ஆகும்.

Tata-வின் மலிவு விலை மின்சார கார்களை வாங்கணும்னா 6 மாசங்கள் காத்திருக்கணுமாம்... இவ்ளோ எதுக்குங்க?

இதில், எக்ஸ்இசட்-பளஸ் டிடி-யே அதிக விலைக் கொண்ட தேர்வாக இருக்கின்றது. குளாஸ்ஸி கருப்பு நிற ரூஃப், மிராவுடன் கூடிய ரியர் பார்க் அசிஸ்ட், 17.78 சிமீ அளவுள்ள கனெக்ட் நெக்ஸ்ட் ஃப்ளோட்டிங் டேஷ்-டாப் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், ப்ரீமியம் ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், 30க்கும் மேற்பட்ட இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அல்ட்ரா மாடர்ன் அம்சங்கள் உயர் நிலை தேர்வில் வழங்கப்பட்டுள்ளன. எனவேதான் இதன் விலை மற்றதைவிட அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 2, 2021, 11:29 [IST]
English summary
Due to chip shortage tata motors announced six months waiting period for ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+