இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரான டுவைன் ஜான்சன் அவரது அம்மாவிற்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். இந்த நிகழ்வு குறித்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

'இத விட வேற என்னங்க வேணும்'... என நாங்கள் குறிப்பிடுவது 'தி ராக்' என்றழைக்கப்படும் டுவைன் ஜான்சன் (Dwayne Johnson) அவரது அம்மாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை பற்றிதான். அவர் வழங்கி இருக்கும் காரை குறித்து அல்ல. பணத்தை கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம். ஆனால், தாய்-மகனுக்கு இடையே இருக்கும் உன்னதமான பிணைப்பை வாங்கிவிட முடியாது.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

இதை உணர்த்தும் வகையிலேயே ஓர் நிகழ்வு தற்போது அரங்கேறியிருக்கின்றது. டுவைன் ஜான்சன் கிறிஸ்து பிறப்பு நாளான கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அவரது அம்மாவிற்கு ஆச்சரிய பரிசளித்து மகிழ்வித்திருக்கின்றார். விலை உயர்ந்த காரை பார்த்த அவர் ஒரு நிமிடம் உறைந்து-போய் விட்டார் என்ற கூறலாம். இதுகுறித்த உருக்கமான பதிவையே தனது இன்ஸ்டா பதிவின் வாயிலாக பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் டுவைன் ஜான்சன் தற்போது பதிவிட்டிருக்கின்றார். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

டுவைன் ஜான்சன் புத்தம் புதிய கடில்லாக் எக்ஸ்டி6 (2022 Cadillac XT6) எஸ்யூவி காரையே பரிசாக வழங்கியிருக்கின்றார். இது ஓர் பிரீமியம் தர லக்சூரி காராகும். அதாவது, பிரீமியம் தர அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாகும். இத்தகைய ஓர் உயரிய ரக காரையே டுவைன் ஜான்சன் கிறிஸ்துமஸ் தின பரிசாக அவரது அம்மாவிற்கு டிசம்பர் 25ம் தேதி அன்று வாங்கிக் கொடுத்து இன்பதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

உண்மையில் இது ஓர் மிக சிறந்த பரிசுதான். ஏனெனில், கடில்லாக் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக புதிய கடில்லாக் எக்ஸ்டி6 சொகுசு கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. மிகவும் கவர்ச்சிகரமான தயாரிப்பும்கூட இது. இத்தகைய ஓர் காரை முன்னாள் மல்யுத்த வீரர் அவரது அம்மாவிற்கு பரிசளித்திருக்கின்றார்.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

எந்தவொரு வரியும் இன்றி இந்த கார் அமெரிக்காவில் 65 டாலர்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 42 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஏற்கனவே டுவைன் ஜான்சனின் அம்மாவிடத்தில் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

இந்த நிலையில் புதியதாக மேலும் ஓர் காரை அவரின் பயன்பாட்டில் சேர்த்திருக்கின்றார், இந்த பிரபல நடிகர். இந்த செயலினால் தாய் பாசத்தில் மிஞ்சிய ஓர் நபராக அவர் தென்பட தொடங்கியிருக்கின்றார். 2022 கடில்லாக் எக்ஸ்டி6 ப்ரீமியம் சொகுசு கார் முன்பக்க வீல் இயக்கம் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இக்காரில் சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக 3.6 லிட்டர் வி6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 306 பிஎச்பி பவரை 6,600 ஆர்பிஎம்மிலும், 367 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த எஞ்ஜினில் 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் அம்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

இத்தகைய சூப்பர் எஞ்ஜின் கொண்ட காரே தற்போது பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. டுவைன் ஜான்சன் இதுபோன்று காரை பரிசாக வழங்குவது முதல் முறையல்ல. அண்மையில், அவரது நண்பரும், அமெரிக்க கப்பற்படை வீரருமான ஆஸ்கர் ரோட்ரிகஸ் என்பவருக்கே டுவைன் ஜான்சன் அவரது போர்டு எஃப்-150 பிக்-அப் ட்ரக்கை (Ford F-150 Raptor) பரிசாக வழங்கினார்.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

தனக்கு ஏற்றவாறு பெரும் மாடிஃபிகேஷன்களை டுவைன் ஜான்சன் போர்டு எஃப்-150 பிக்-அப் ட்ரக் காரில் செய்திருக்கின்றார். ஆகையால், அது ஓர் அரிய வகை வாகனமாக காட்சி தந்தது. இத்தகைய வாகனத்தையே டுவைன் ஜான்சன் ஆஸ்கர் ரோட்ரிகஸுக்கு பரிசாக வழங்கினார். இந்த சம்பவம் அரங்கேறி சில வாரங்களே ஆகின்றன.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

இந்த நிலையிலேயே தனது அம்மாவிற்கு கடில்லாக் நிறுவனத்தின் புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார் தி ராக் எனும் டுவைன் ஜான்சன். இந்த காரை பரிசாக பெற்ற போது தனது அம்மா பெரும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அடைந்ததாக நடிகர் டுவைன் ஜான்சன் தனது இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.

இத விட வேற என்னங்க வேணும்... தனது அம்மாவுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்த தி ராக்... விலை இவ்ளோ அதிகமா!!

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கிறிஸ்துமஸுக்கு புதிய காரைக் கொடுத்து என் அம்மாவை ஆச்சரியப்படுத்தினேன். அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். அத்துடன் அவர் அழுகவும் செய்தார். அவருடன் சேர்ந்து அவரது பேரக் குழந்தைகள் புதிய காரில் ஒரு ரவுண்டு சென்று வந்தனர். இந்த மாதிரியான செயலின் வாயிலாக நான் என் அம்மாவிற்குமிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டினேன். அவருடன் ஒப்பிடுகையில் பரிசு ஒரு பொருட்டல்ல. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் புதிய பயணத்தை அனுபவிக்கவும்!!! நாங்கள் உங்களை விரும்புகிறோம்" என கூறியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dwayne johnson gifts cadillac xt6 suv as a christmas to his mother
Story first published: Monday, December 27, 2021, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X