வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்! எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக இளைஞர்களை போலீஸார் தர-தரவென இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

தங்களுடைய வாகனம் அழகாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு வாகனத்தின் உரிமையாளரும் நினைப்பது உண்டு. இதற்காக சில பல லட்சங்களை செலவிட்டு வாகனத்தை அழகானதாகவும், வித்தியாசமானதாகவும் மாற்றுபவர்களும் கூட இங்கு இருக்கின்றனர். இந்த காலச்சாரம் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்த வண்ணம்.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

அதாவது, வாகனங்களின் உண்மையான உருவ தோற்றத்தை மாற்றியமைக்கும் நிகழ்வுகள் கடந்த சில காலங்களாக அதிகளவில் அரங்கேறி வருகின்றது. ஆனால், இந்திய போக்குவரத்து விதிகளின்படி இது ஓர் விதிமீறல் செயலாகும். எனவேதான் ஃபோர்ஸ் டிராவல்லர் வேனின் உரிமையாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

நமது அண்டை மாநிலமான கேரளாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. எபின் மற்றும் விபின் இவர்களையே கேரளா மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் வாகனத்தை மாற்றியமைத்ததற்காக கைது செய்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஓர் யுட்யூப் சேனலை இயக்கி வருகின்றனர். இ புல் ஜெட் எனும் பெயர் கொண்ட சேனலையே அவர்கள் நடத்தி வருகின்றனர்.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

இது ஓர் பயணங்கள் குறித்த சேனலாகும். இதற்கு 1.7 மில்லியன் பின் தொடர்பவர்கள் (subscribers) இருக்கின்றனர். தங்களுடைய சேனலில் பயணங்கள் குறித்த வீடியோவை வெளியிட எபின் மற்றும் விபின் தற்போது மாடிஃபை செய்யப்பட்ட ஃபோர்ஸ் டிராவல்லர் வாகனத்தையைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதற்கு முன்பாக மாருதி ஆம்னி பன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

இந்த நிலையில் தங்களின் பின் தொடர்பவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அண்மையில் ஃபோர்ஸ் டிராவல்லர் வாகனத்தை மிகவும் தனித்துவமான தோற்றத்திற்கு அவர்கள் மாற்றியமைத்திருக்கின்றார். நிறம் மற்றும் வெளிப்புறத்தில் அவர்கள் மாற்றம் செய்திருக்கின்றனர். தொடர்ந்து, தங்களின் முகம் பதித்த யுட்யூப் சேனலின் சின்னத்தையும் அவர்கள் ஃபோர்ஸ் டிராவல்லர் வாகனத்தில் இடம் பெற செய்திருக்கின்றனர்.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

இத்துடன், சமூக வலை தளங்களின் சின்னங்கள் மற்றும் நரியின் உருவம் ஆகியவை அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் மிகவும் ஷார்பான நிறங்களை அவர்கள் வாகனத்தின் வெளிப்புறத்தை மாற்ற பயன்படுத்தியிருக்கின்றனர். மேலும், சந்தைக்கு பிறகான (பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட) ஹெட்லேம்ப், வால் பகுதி மின் விளக்கு ஆகியவற்றையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

இதுமாதிரியான ஒட்டுமொத்த மாற்றங்களுக்காகவே வாகனத்தையும், அதன் உரிமையாளர்களையும் கேரளா மோட்டார் வாகனத்துறையினர் தற்போது காவல்நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். ஃபோர்ஸ் டிராவல்லர் வாகனத்தில் இன்னும் சில சந்தைக்கு பிறகான கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், கூறை மேற்பகுதியில் நான்கு மின் விளக்குகள் மற்றும் ஓர் எல்இடி மின் விளக்கு பார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட கருவிகள் ஆகும்.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

இந்த மின் விளக்குகளை ஒளிர விடுவதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பார்வை பிரச்னை ஏற்படும். அந்தளவிற்கு மிக மிக அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்தக் கூடியவையே அவை. எனவேதான் இந்த மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் விதிகள் கூறுகின்றன. இத்துடன் வாகனத்தின் டயர், உடல் பகுதி ஆகியவற்றிலும் கண்களை பறிக்கும் எல்இடி சீரியல் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள்... எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!

ஃபோர்ஸ் வாகனத்தின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சிறிய தொலைக் காட்சி பெட்டி, அதிக மிருதுவான சோஃபா என பல்வேறு சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இதன் உட்பக்கம் நகரும் வீடுபோல் மாற்றப்பட்டிருக்கின்றது.

நீண்ட தூர பயணம் மற்றும் பயணத்தின்போது தங்கிக் கொள்ள ஏதுவாக இவ்வாகனத்தை இளைஞர்கள் மாற்றியமைத்திருக்கின்றனர். இதில் வெளிப்புற தோற்றம் மாற்றியமைக்கப்பட்ட காரணத்திற்காகவே கேரளா மோட்டார் வாகனத்துறையினர் யுட்யூபர்கள் மீது அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

இவர்கள் மீது கேரள மோட்டார் வாகனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல. மிக சமீபத்திலும்கூட இளைஞர்களையும், அவர்களின் வாகனத்தையும் காவல்நிலையம் எடுத்துச் சென்றிருக்கின்றனர். வாகனத்தின் பெர்மிட் காலவதியாகிவிட்டதாகக் கூறி ஆர்டிஓ அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Image Courtesy: E BULL JET FANS OFFICIAL/Instagram

ஆனால், அது பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்த பின்னர் எந்த நடவடிக்கையும் இன்றி அவர்கள் வெளியில் விட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மீண்டும் ஆவணத்தில் குளறுபடி இருப்பதாகக் கூறி மீண்டும் இளைஞர்கள் மீது கேரளா எம்விடி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. காவலர்கள் அவர்களை வாகனத்தில் ஏற்றி செல்லும் வீடியோ மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Most Read Articles
English summary
E bull jet youtubers busted for allegedly modifying force traveller
Story first published: Tuesday, August 10, 2021, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X