சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகவும் மெதுவாகதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. என்றாலும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்திய சந்தையில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 6,261 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

நடப்பு நிதியாண்டின் (2021-2022) முதல் பாதி என்பது, நடப்பாண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், அதாவது 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவில் வெறும் 1,872 எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 234 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சி என ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர். நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 3,618 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 214 சதவீத வளர்ச்சியை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பதிவு செய்துள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 1,789 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 250 சதவீத வளர்ச்சியை எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பதிவு செய்துள்ளது.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த பட்டியலில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில், 801 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் 701 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 51 ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதற்கு அடுத்த இடத்தில் மஹிந்திரா வெரிட்டோ உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் வெறும் 2 மஹிந்திரா வெரிட்டோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 75 சதவீத வீழ்ச்சியாகும். ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய சந்தையில் 6,261 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய சந்தையில் வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார், டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

இவை அனைத்துமே ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் ஆகும். இதில், டாடா பன்ச் கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டுமல்லாது, சிஎன்ஜி வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர்... இந்தியால இனி வீட்டுக்கு வீடு எலெக்ட்ரிக் கார்தான் நிக்க போகுது! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்திருவீங்க!

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் நிறைய சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையால் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. எனவே டாடா நிறுவனமும் நிறைய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 8, 2021, 9:41 [IST]
English summary
Electric car sales increased by 234 per cent in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+