இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

நடப்பு 2021-22 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

பெட்ரோல் & டீசலின் விலை நாளுக்கு நாள் விண்ணை தொட்டு வருவதாலும், மத்திய & மாநில அரசாங்கங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதாலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

அதுமட்டுமில்லாமல் இவை பூஜ்ஜிய மாசு உமிழ்வை ஏற்படுத்துவதாக உள்ளன. இருப்பினும் மொத்த பயணிகள் வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்கு தற்போதைக்கு 1%-க்கும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் எலக்ட்ரிக் கார்களை வாங்க பலர் விருப்பப்பட்டாலும், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போதைக்கு குறைவாகவே உள்ளது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

2022 நிதியாண்டின் கடந்த முதல் 6 மாதங்களில் (ஏப்ரல்- செப்டம்பர்) கிட்டத்தட்ட 6,261 எலக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த நிதியாண்டில் மொத்த 12 மாதங்களில் 5,905 எலக்ட்ரிக் கார்களே விற்கப்பட்டு இருந்தன. முதல் ஆறு மாதங்களில் வெறும் 1,872 எலக்ட்ரிக் கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

இந்த வகையில் பார்த்தோமேயானால், இவி விற்பனை இந்தியாவில் சுமார் 234% உயர்ந்துள்ளது. தற்போது எலக்ட்ரிக் பயணிகள் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் என்று பார்த்தால், டாடா மோட்டார்ஸ் (நெக்ஸான் இவி & டிகோர் இவி), எம்ஜி மோட்டார்ஸ் (இசட்.எஸ் இவி), ஹூண்டாய் (கோனா) மற்றும் மஹிந்திரா (வெரிடோ) உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

இதில் டாடா மோட்டார்ஸின் ஆதிக்கமே தற்போதைக்கு அதிகமாக உள்ளது. டாடா நெக்ஸான் இவி 2021-22 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்தம் 3,618 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. அதுவே கடந்த நிதி ஆண்டில் இதே முதல் 6 மாதங்களில் வெறும் 1,152 நெக்ஸான் எலக்ட்ரிக் கார்களையே டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

டாடா மோட்டார்ஸின் மற்றொரு எலக்ட்ரிக் கார் மாடலான டிகோர் இவி 801 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. மேலும் டாடா நிறுவனம் எக்ஸ்.பிரஸ் டி இவி என்ற எலக்ட்ரிக் காரையும் விற்பனை செய்கிறது. ஆனால் இது டாக்ஸி போன்ற கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் பயணிகள் கார்களின் லிஸ்ட்டில் வராது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

இவற்றின் மூலம் மொத்த எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் மட்டுமே சுமார் 70%-ஐ ஆக்கிரமித்துள்ளது. தற்போதைக்கு எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 6 ஆயிரத்தை கடந்துள்ள டாடா நிறுவனம் நடப்பு 2021-22 நிதியாண்டை 10,000 என்கிற மைல்கல்லுடன் நிறைவு செய்ய முனைப்புடன் உள்ளது. அடுத்த 5 வருடங்களில் மேலும் 10 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த அக்டோபர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

ரூ.7,500 கோடி வரையில் இதற்கான முதலீட்டை சேகரித்துவரும் டாடா நிறுவனம் புதிய 10 எலக்ட்ரிக் கார்களில் முதல் 7 மாடல்களை அடுத்த 4 வருடங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் எலக்ட்ரிக் கார், எம்ஜி இசட்.எஸ் இவி. இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் 2021 ஏப்ரல்- செப்டம்பர் மாதம் வரையிலான கடந்த 6 மாதங்களில் 1,789 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜி இசட்.எஸ் கடந்த 2020-21 நிதியாண்டின் முதல் அரைப்பாதியில் 511 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் விற்பனை கிட்டத்தட்ட 29% உயர்ந்துள்ளது. டாடா டிகோர் இவி இந்த வரிசையில் 3வது இடத்தில் இருக்க, நான்காவது இடத்தை ஹூண்டாய் கோனா பிடித்துள்ளது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

ஆனால் உண்மையில் கோனா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை இம்முறை வெகுவாக குறைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 2020-21 நிதியாண்டில் பெரும்பாலான நாட்களில் ஆட்டோமொபைல் துறை முடங்கியதால், மற்ற எலக்ட்ரிக் கார்களின் விற்பனை இந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பெரிய அளவில் குறைந்திருந்தது.

இந்த வருடத்திற்குள் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ்!! இரண்டாவது இடத்தில் எம்ஜி

ஆனால் கோனா கார்களின் விற்பனை மட்டும் நடப்பு நிதியாண்டில் தற்போதுவரையில் பாதியாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 101 கோனா எலக்ட்ரிக் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் வெறும் 51 கோனா கார்களே விற்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Electric Car Sales India H1 FY2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X