'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

உலக அளவில் கார் பிரியர்களின் ஆவலை வெகுவாக கிளறி இருக்கும் டெஸ்லா சைபர்டிரக் குறித்த முக்கியத் தகவல்களை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில், வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் வசதி சைபர்டிரக்கில் இருப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

கடந்த 2019ம் ஆண்டு வினோதமான டிசைனில் வெளியிடப்பட்ட டெஸ்லா சைபர்டிரக் மீதான ஆவல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உலகத்தையே உற்று நோக்க வைத்துள்ளது. இந்த சைபர் பிக்கப் டிரக்கின் ரேஞ்ச் மற்றும் இழுவை திறன் குறித்த தகவல்கள் மிரள வைப்பதாக இருந்து வருகிறது. டெஸ்லா சைபர் டிரக்கில் மிக சக்திவாய்ந்த பேட்டரி தொகுப்பும், மின்மோட்டார்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

இதன்மூலமாக, சைபர் டிரக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 804 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் பிரபலமான தனிநபர் பயன்பாட்டு வகை பிக்கப் டிரக்குகளில் நடமாடும் இல்லத்தை இணைத்துச் செல்வதற்கான வசதி இடம்பெறும்.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

அந்த வகையில், இந்த சைபர் டிரக்கிலும் பின்புறத்தில் சிறிய நடமாடும் இல்லத்தை இணைத்து எடுத்துச் செல்வதற்கான வசதி கொடுக்கப்படுகிறது. இந்த சைபர் டிரக் 6.35 டன் எடை கொண்ட ட்ரெயிலரை இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டது.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

அதாவது, சிறிய நடமாடும் இல்லத்தை இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக, இதுபோன்று இணைக்கப்படும் நடமாடும் இல்லத்தில் சிறிய ஜெனரேட்டர் மூலமாக மின்சார சப்ளை பெறப்படும்.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

ஆனால், சைபர் டிரக்கிலிருந்து ட்ரெயிலர் கட்டமைக்கப்படும் வீட்டிற்கு மின்சார சப்ளை பெற முடியும் என்று தெரிய வந்துள்ளது. இதனை எலான் மஸ்க் சமூக வலைதள செய்தி மூலமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

மேலும், சிறிய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்கான வாய்ப்பும் இந்த சைபர் டிரக்கில் இருக்கும் என்று தெரிகிறது. இதனால், இந்த சைபர் டிரக்கை வாங்குவோர் வீடுகளில் மின்சார இல்லாத நேரத்தில், மின் சப்ளையை பெறும் வாய்ப்பை பெற முடியும்.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

புதிய டெஸ்லா சைபர் டிரக் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஜிகாஃபேக்டரியில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி துவங்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து முழு வீச்சில் உற்பத்தியும், டெலிவிரிப் பணிகளும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 'சின்ன' வீட்டிற்கு மின்சாரம் வழங்குமாம்... டெஸ்லா சைபர்டிரக் வெளியான சூப்பரான தகவல்!

டெஸ்லா சைபர்டிரக் உலக அளவில் மின்சார கார் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் பல விசேஷ தொழில்நுட்பங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல லட்சம் பேர் இந்த சைபர்டிரக்கை புக்கிங் செய்துவிட்டு காத்திரு்ககின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla CEO Elon Musk has confirmed all new Cybertruck will able to give power supply to motor homes.
Story first published: Friday, March 12, 2021, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X