கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை! ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!

ஒரே இடத்தில் இருந்து அமாலக்கத்துறையினர் 20 சொகுசு கார்கள் வரை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

அதிமுக இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு சூடிபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் வீட்டில் இருந்து விலையுயர்ந்த 16 சொகுசு கார்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. டெல்லி அமலாக்கத் துறையினரே இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக-வின் பொதுச் செயலாளருமான ஜெ. ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அவர் தலைமை தாங்கி வந்த கட்சி இரண்டாக பிளவு பட்டது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி மற்றும் விகே சசிகலா அணி என அக்கட்சி இரண்டாக பிரிந்தது.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

அணிகள் இரண்டாக பிரிந்தாலும் இரு தரப்பினரும் அக்கட்சியின் அடையாளமான இரட்டை சிலை சின்னத்திற்கு உரிமை கோரினர். இவ்விவகாரம் சூடுபிடித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை (இரட்டை சிலை) முடக்கியது. இதனால் யாரும் இரட்டை இலையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியது.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

இந்த நிலையில் டிடிவி தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திர சேகரிடம் ஒப்பந்தம் (டீல்) பேசியதாகக் கூறப்படுகின்றது. இதற்காக அவருக்கு பல கோடிகளை டிடிவி தினகரன் தரப்பினர் லஞ்சம் வழங்கியதாகவும் புகார்கள் உள்ளன.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

இந்த புகார்களின் அடிப்படையில் டிடிவி தினகரன், சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். சுகேஷ் சந்திர சேகர் மீது இந்த வழக்கு மட்டுமின்றி இன்னும் பல வழக்குகள் அமலாக்கத் துறையில் நிலுவையில் உள்ளன. 2013ம் ஆண்டில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் மோசடி செய்தது போன்ற வழக்குகள் அவர் மீதும், அழரது பெண் தோழி நடிகை லீனா மரியா பால் மீதும் இருக்கின்றன.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

தற்போது இவ்வழக்குகளுக்காக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கானாத்தூர் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

இந்த சோதனையில் 16க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்கள், லேப்டாப், ரொக்கம் மற்றும் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சொகுசு கார்களின் மதிப்பு மட்டும் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து கார்களின் வீடியோவும் வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் Mercedes-AMG G63, Bentley Bentayga, Mercedes-Maybach S-Class, Land Rover Range Rover, Bentley Flying Spur, Toyota Fortuner, Isuzu D-Max V-Cross, Lamborghini மற்றும் இம்போர்ட் செய்யப்பட்ட Cadillac Escalade SUV ஆகிய மிக மிக விலையுயர்ந்த கார்களை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

இவற்றின் மதிப்பே தோராயமாக சுமார் 25 கோடிகள் இருக்கும் என கூறப்படுகின்றது. இதில், Mercedes Maybach S-Class காரின் விலை மட்டுமே ரூ. 2 கோடிகள் ஆகும். இதில் மிக அதிக விலைக் கொண்ட கார் மாடலாக Bentley Bentayga இருக்கின்றது. இதன் விலை ரூ. 4.5 கோடிகள் ஆகும். இதற்கு அடுத்தபடியாக அதிக விலைக் கொண்ட கார் மாடலாக பென்ஸ் G-Wagen கார் இருக்கின்று. இதன் விலை ரூ. 3 கோடிகள் ஆகும்.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

தொடர்ந்து, Range Rover ரூ. 2 கோடியாகவும், 2 Toyota Fortuner கார்களின் மதிப்பு ரூ. 80 லட்சமாகவும், Isuzu D-Max V காரின் விலை ரூ. 20 லட்சமாகவும் இருக்கின்றது. இன்னும் சில மாடல்களின் விலை என்ன என்று துள்ளியமாக கூற முடியமில்லை. இத்தகைய விலையுயர்ந்த சொகுசு கார்களையே அமலாக்கத் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

கொத்தாக ஒரே இடத்தில் 20 சொகுசு கார்களை தூக்கிய அமலாக்க துறை... ஒவ்வொரு காரின் விலையையும் கேட்டா தலையே சுத்துது!!

இவற்றுடன் சேர்த்து பல கோடி மதிப்புள்ள கேரவன் சொகுசு வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவருக்கு பல முன்னணி தொழிலதிபர்களுடன் தொடர்புகள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடித்து தருவதாகக் கூறி இவர் பல தொழிலதிபர்களிடம் இருந்து பணம் பறித்திருக்கின்றார்.

Source: India Today

இதுபோன்று 20க்கும் மேற்பட்ட வழக்குகள் சுகேஷ் சந்திரசேகர் மீது நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் முழுமையாக முடிவடையும் வரை அவருக்கு சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் அலமாக்கத் துறையின் பிடியிலேயே இருக்கும். இதுபோன்ற வழக்குகள் முடிவடைய பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை முறையான பராமரிப்பில்லை எனில் அனைத்து வாகனங்களும் அதன் மதிப்பை இழக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுமாதிரியான சம்பவங்கள் ஏற்கனவே நமது நாட்டில் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Enforcement directorate seized more than 16 cars worth more than rs 20 crore
Story first published: Friday, August 27, 2021, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X