மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

எதிர்கால மின்சார போக்குவரத்திற்கு வேகமாக முன்னேற்றி வரும் நாடுகளுள் ஒன்றான சீனாவில் நடப்பு 2021ஆம் ஆண்டின் முதல் கால்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை இனி செய்தியில் தொடர்ந்து பார்ப்போம்.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

சீன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கடந்த ஒரு ஆண்டில் மிக பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

2020ஆம் ஆண்டின் முதல் கால்பகுதி (ஜனவரி- மார்ச்) உடன் ஓப்பிடுகையில் இந்த கால்பகுதியில் சுமார் 279.6 சதவீதம் அதிகமாக மின்சார வாகனங்கள் சீனாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு, கடந்த ஆண்டு துவக்கத்தில், முழு சீனாவே கொரோனா வைரஸ் பயத்தில் இருந்தது முக்கிய காரணமாகும்.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

ஏனெனில் அந்த சமயத்தில் சீனா முழுக்க ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டிருந்தன. இதனால் வாகன விற்பனை என்பது முற்றிலுமாக தடைப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கடுத்த 2021ஆம் ஆண்டிலேயே எலக்ட்ரிக் வாகன விற்பனை இந்த அளவிற்கு அதிகரிக்கும் என்று யாரும் நினைவிக்கவில்லை.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

276.6 சதவீதம் அதிகமாக விற்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் வாகனங்களில் ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்களும், முழு-மின்சார வாகனங்களும் அடங்குகின்றன. இந்த முன்னேற்றம் அங்குள்ள இவி தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

ஆனால் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு சீனாவில் எந்தவொரு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமும் தனித்துவமாக இல்லை என்பது தான் உண்மை. உலகிலேயே சீன ஆட்டோமொபைல் சந்தை தான் மிக பெரியது. இத்தகைய சந்தையில் இருந்துதான் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு உலகம் முழுக்க பரவுகிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

இங்கு டெஸ்லா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களது எலக்ட்ரிக் வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேநேரம் பிஒய்டி, நியோ மற்றும் எக்ஸ்பென்ங் போன்ற உள்ளூர் சீன நிறுவனங்களும் கணிசமான அளவில் எலக்ட்ரிக் வாகனங்களை அந்த நாட்டில் விற்றுவருகின்றன.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

இதில் பிஒய்டி நிறுவனம் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதத்திற்குள்ளாக மொத்தம் 24,218 எலக்ட்ரிக் வாகனங்களை சீனாவில் விற்றுள்ளது. இந்த எண்ணிக்கை 2020 முதல் காலாண்டை காட்டிலும் கிட்டத்தட்ட 97 சதவீதம் அதிகம்.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

அதேநேரம் கடந்த 2021 காலாண்டில் நியோவின் 2,060 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2020 உடன் ஒப்பிடும்போது 423% அதிகம். அதேபோல் எக்ஸ்பென்ங் நிறுவனமும் 487 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

ஒட்டு மொத்தமாக 226,000 எலக்ட்ரிக் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்கள் கடந்த மூன்று மாதங்களில் சீன சந்தையில் விற்கப்பட்டுள்ளன. டெஸ்லா கடந்த சில மாதங்களாக குறைந்தது 30 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களையாவது சீனாவில் விற்பனை செய்துவிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!

கொரோனாவின் முதல் கோர தாண்டவத்தை எதிர்கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் அரசாங்கத்தின் உதவியால் ஆட்டோமொபைல் துறை வேகமாக பழைய பாதைக்கு திரும்பி வருகிறது. இந்த நாட்டில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருவது நமது எதிர்கால போக்குவரத்து என்ன என்பதை சுட்டி காட்டுவதை போல் உள்ளது.

Most Read Articles

English summary
EV sales in China grow up 279% in Q1 of 2020; local players flex muscles
Story first published: Sunday, April 11, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X