ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

ஹாலிவுட் படமான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் அதன் 9வது பாகத்துடன் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த 9வது பாகத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

கார் பந்தய காட்சிகளுக்கு பெயர் போன ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் ஆங்கில படங்களை பற்றி நிச்சயம் யாரும் கேள்விப்படாமல் இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

9வது பாகம் வரையில் வருவதில் இருந்தே ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர் என்பதை அறியலாம். கார் மற்றும் பைக்குகளில் அதிக ஆர்வம் உடையவர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் படங்கள் பிடிக்கும்.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் படங்களினால் பல கார்கள் ஓவர் நைட்டில் பிரபலமாகியுள்ள கதை எல்லாம் இருக்கு. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டொயோட்டா சூப்ரா எம்கே4, நிஸான் ஸ்கைலைன் ஜிடி-ஆர்34 மற்றும் மிட்சுபிஷி லான்சர் எவோ கார்களை சொல்லலாம்.

இந்த வகையில் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 படத்தில் காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

Image Courtesy: Universal Pictures

2020 டொயோட்டா சூப்ரா

பெரும்பான்மையான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களில் பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய கார், டொயோட்டா சூப்ரா. இதன் மை2020 மாடல் இந்த 9ஆம் பாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோ டிரிஃப்ட்டில் ஹான் லூ பயன்படுத்திய மஸ்டா ஆர்எக்ஸ்-7 காரின் நிறத்தில் சூப்ரா ட்ரைலரில் காட்சி தருகிறது.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

1970 டாட்ஜ் சார்ஜர் ஆர்/டி

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களில் டோமினிக் டொரெட்டோவிற்கு (வின் டீசல்) 1970, 80களில் பயன்படுத்தப்பட்ட வலிமையான அமெரிக்க கார்கள் தான் வழங்கப்படுவது வழக்கம். இந்த வகையில் தற்போது 9வது பாகத்திலும் 1970 டாட்ஜ் சார்ஜர் போன்று இருக்கும் பழமையான அமெரிக்க கார் வின் டீசலுக்கு கொடுக்கப்படலாம்.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

2020 ஹெல்கேட் சார்ஜர் வைட்பாடி

இதுவும் டோமினிக் டொரெட்டோவின் கேரக்டருக்கும், அவரது தோற்றத்திற்கும் ஏற்ற காராகும். இதனால் 2020 ஹெல்கேட் சார்ஜர் புதிய ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் படத்தில் இடம் பெறவுள்ளது. இந்த ஹெல்கேட் காரில் பொருத்தப்படும் வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 707 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

1974 செவ்ரோலெட் நோவா எஸ்எஸ்

ஜோர்டானா ப்ரூஸ்டர் மீண்டும் மியா டொரெட்டோவாக ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 படத்தில் நடித்துள்ளார். இவரை 1974 செவ்ரோலெட் நோவா எஸ்எஸ் கார் உடன் இந்த படத்தில் பார்க்கலாம்.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

1968 சார்ஜர் 500

மேற்கூறப்பட்டுள்ள பழமையான கார்களுடன் 1968களில் அமெரிக்காவில் விற்பனையில் இருந்த சார்ஜர் 500 காரும் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 படத்தில் தோன்றவுள்ளது. சார்ஜர் 500, அமெரிக்கா ஃப்ளோரிடாவில் நடைபெற்ற டேடோனா போட்டியில் வெல்வதற்காக ஃபோர்டு கார்களுக்கு போட்டியாக சார்ஜர் மாடலில் டாட்ஜ் நிறுவனம் கொண்டுவந்த ஸ்பெஷல் எடிசனாகும்.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

2020 ஜீப் கிளாடியேட்டர்

ரோமன் பியர்ஸாக அமெரிக்க நடிகர் டைரெஸ் கிப்சன் இந்த புதிய ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்தில் பயன்படுத்தியுள்ள காராகும். அமெரிக்காவில் இந்த பிக்அப் வாகனம் 285 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடிய 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 மற்றும் 260 பிஎச்பி-ஐ வழங்கக்கூடிய 3.0 லிட்டர் ஈக்கோடீசல் வி6 என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

2018 நோபல் எம்600

உலகில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் சூப்பர் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் பிரிட்டிஷ் பிராண்டான நோபலின் 2018 எம்600 கார் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸின் 9ஆம் பாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபெராரியின் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட இந்த காரில் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?

2015 ஷெல்பி மஸ்டங் ஜிடி350

டபிள்யூ.டபிள்யூ.இ டிவி நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமான ஜான் சீனா ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 படத்தில் ஜாகோப் என்ற பெயரில் முக்கிய வில்லனாக அறிமுகமாகவுள்ளார். இவருக்கு 2015 ஷெல்பி மஸ்டங் ஜிடி350 கார் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fast and Furious 9: Mean machines to watch out for. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X