இந்தியாவின் அதிவேகமான டாடா ஹெரியர் இதுதான்!! மணிக்கு 215கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது!
225 பிஎச்பி-யில் இயங்கக்கூடிய வகையில் டாடா ஹெரியர் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமான ஹெரியர் என பெயரெடுத்துள்ள இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெரியர் எஸ்யூவி மாடலை கடந்த ஆண்டில் அப்டேட் செய்திருந்தது. இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் அப்டேட் செய்யப்பட்ட ஹெரியரின் தோற்றம் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அதேபோல் டீசல் என்ஜினும் 170 பிஎஸ்-ஐ வெளிப்படுத்தும் வகையில் 2020 ஹெரியரில் கொண்டுவரப்பட்டது. முந்தைய ஹெரியரில் இதே டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 140 பிஎஸ் வரையில் மட்டுமே வெளிப்படுத்தியது. இருப்பினும் இந்த அதிகரிக்கப்பட்ட ஆற்றலும் சில வாடிக்கையாளர்களுக்கு போதவில்லை போல.

ஏனெனில் இங்கு ஒரு டாடா ஹெரியர் கார் அதிகப்பட்சமாக 225 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. நிக் ஜிக் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த கஸ்டமைஸ்ட் ஹெரியர் கார் குறித்த வீடியோவினை கீழே காணலாம்.
Image Courtesy: Nick Zeek
இதில் ஹைலைட் என்னவென்றால் இது மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெரியரின் எக்ஸ்டி+ வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டார்க் எடிசனாகும். இதற்கு முன்னர் இது அதிக சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹெரியராக விளங்கியது.

தற்போது அதிவேகமான ஹெரியர் என்ற பெயரையும் சேர்த்து பெற்றுள்ளது. இந்த செயல்திறன்மிக்க டாடா ஹெரியரின் உரிமையாளர் பெயர் சுபம் பகுல் ஆகும். இவரது வேண்டுக்கோளிற்கு இணங்க கோட்6 ட்யூனிங் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் இந்த ஹெரியரை மாடிஃபை செய்துள்ளது.

இந்த வகையில் டாடா நிறுவனம் ஹெரியரில் வழங்கும் சிவப்பு லைன் 6,000 ஆர்பிஎம்-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்பட்சமாக மணிக்கு 215கிமீ வேகத்தில் இந்த காரினை இயக்கலாம் என கூறும் உரிமையாளர், என்ஜினில் இருந்து நீராவி வெளியேறாது என்றும் கூறியுள்ளார்.

வழக்கமான டாடா ஹெரியரில் வழங்கப்படும் டீசல் என்ஜின் 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுவே இந்த குறிப்பிட்ட ஹெரியரில் நிலை 1 திருத்தத்தால், 228 பிஎஸ் மற்றும் 470 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் ஆற்றல் 1,800 ஆர்பிஎம்-மிற்கு பிறகு வெளிவரும் வகையிலும் இந்த டீசல் என்ஜின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1800 ஆர்பிஎம்-இல், என்ஜினில் இருந்து சிறந்த எரிபொருள் திறனை பெறலாம். அதேபோல் இசியு மறுபெயரிடப்பட்டுள்ளதால், இது முழு திறனில் இயங்கும்.

மேலும் என்ஜினிற்கு காற்றை வடிக்கட்டி கொடுக்கும் காற்று வடிக்கட்டியும் புதிய ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதால், என்ஜின் முன்பை விட நன்றாகவே காற்று பரிமாற்றத்தை பெறும். இவை தவிர்த்து இந்த ஹெரியரில் வேறெந்த இயந்திர பாகத்திலும் கை வைக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








