பல மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கார் வீணாய்போன காட்சி! கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!

பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சூப்பர் காரொன்று விபத்தில் நொறுங்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல மில்லியன் அமெரிக்க டாலர் மாதிப்புள்ள கார் வீணாய் போன காட்சி... கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!!

உலகின் விலையுயர்ந்த சூப்பர் கார்களில் ஃபெர்ராரி 458 மாடலும் ஒன்று. இந்த காரே பந்தயம் ஒன்றில் ஈடுபடும்போது விபத்தில் சிக்கி பெருத்த சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இதுகுறித்த வீடியோவை சூப்பர் கார்ஸ் எனும் இன்ஸ்டா பக்கம் வெளியிட்டிருக்கின்றது.

பல மில்லியன் அமெரிக்க டாலர் மாதிப்புள்ள கார் வீணாய் போன காட்சி... கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!!

ரேஸ் ட்ராக்குகள், வாகன ஸ்டண்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றுகின்றன. எனவேதான், பலர் தங்களின் திறன்களை வெளிக்கொண்டு வர ரேஸ் ட்ராக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இவை அதிக சவால்கள் நிறைந்த பாதைகளின் வாயிலாக ரைடர்களுக்கு த்ரில்லான பயண அனுபவத்தை வழங்குகின்றன.

பல மில்லியன் அமெரிக்க டாலர் மாதிப்புள்ள கார் வீணாய் போன காட்சி... கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!!

இத்தகைய பாதை ஒன்றில் மித மிஞ்சிய வேகத்தில் சென்றபோதே ஃபெர்ராரி 458 விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியிருக்கின்றது. இதுகுறித்த காட்சிகளே தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகியிருக்கின்றன. இந்த காட்சிகள் அனைத்தும் விபத்தில் சிக்கிய காருக்குள் இருந்த கேமிராவில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.

பல மில்லியன் அமெரிக்க டாலர் மாதிப்புள்ள கார் வீணாய் போன காட்சி... கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!!

ட்ராக் நாள் என்ற பெயரில் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகே உள்ள சர்க்யூட் டெல் ஜராமாவில் கார் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியிலேயே கலந்துக் கொண்டபோதே பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஃபெர்ராரி 458 கார் விபத்தில் சிக்கியிருக்கின்றது. இந்த விபத்தில் அதன் டிரைவருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

பல மில்லியன் அமெரிக்க டாலர் மாதிப்புள்ள கார் வீணாய் போன காட்சி... கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!!

ஃபெர்ராரி 458 ஓர் மிட்-எஞ்ஜின் ஸ்போர்ட்ஸ் காராகும். எஃப்430 மாடலை ரீபிளேஸ் செய்யும் வகையில் இந்த மாடலை ஃபெர்ராரி களமிறக்கியது. இக்காரை 2009 ஃப்ராங்க்பர்ட் மோட்டார் கண்காட்சியிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பல மில்லியன் அமெரிக்க டாலர் மாதிப்புள்ள கார் வீணாய் போன காட்சி... கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!!

இதில், 4497 சிசி திறன் கொண்ட 4.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 325 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ரூ. 4.80 கோடி விலையில் ஃபெர்ராரி 458 கார் விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய விலையுயர்ந்த காரே ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்தில் சிக்கியிருக்கின்றது. இதனால் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அக்கார் பெரும் சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. குறிப்பாக, உடற்பாகங்கள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்திருக்கின்றது.

பல மில்லியன் அமெரிக்க டாலர் மாதிப்புள்ள கார் வீணாய் போன காட்சி... கரப்பான் பூச்சிய கவிழ்த்துபோட்டது போல இருக்கு!!

இந்த ரேஸ் ட்ராக் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஸ்தம்பித்து போனது. அதேசமயம், ஓட்டுநரும் அதில் பயணித்தவரும் எந்தவொரு பெரிய பிரச்னையும் இல்லாமல் தப்பியது பலருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ferrari 458 Hits The Tire Barrier And Rolls Over. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X