சந்துக்குள் சொருகிய 3.75கோடி ரூபா கார்! தெரிஞ்சே உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான கார் பிரியர்கள்

சூப்பர் காரை அதன் உரிமையாளர் தெரிந்தே சந்துக்குள் சொருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எங்கு நேர்ந்தது? காருக்கான சேதங்கள் என்ன என்பது பற்றிய அனைத்து தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

உலகின் புகழ்வாய்ந்த சூப்பர் கார் மாடல்களில் ஃபெர்ராரி நிறுவனத்தின் ரோமா மாடலும் ஒன்று. இந்த கார் அதிவேக திறன் வெளிப்பாடு மற்றும் கவர்ச்சியான தோற்றத்திற்கு பெயர்போன ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த சிறப்பு வாய்ந்த விலையுயர்ந்த காரையே அதன் உரிமையாளர் ஒருவர் நுழையவே முடியாத ஓர் சந்துக்குள் நுழைத்து சிக்கலில் சிக்கியிருக்கின்றார்.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

இத்தாலி நாட்டிலேயே இந்த விபரீத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சூப்பர் கார்களை பரந்து, விரிந்த சாலைகளில் வைத்து இயக்குவதே மிகவும் கடினமான ஒன்று. சூப்பர் கார் என்றாலே அதி-வேக திறன் வெளிப்பாட்டிற்கு பெயர்போனவை என்றே அர்த்தம். இத்தகைய ஓர் காரையே அதன் உரிமையாளர் நுழைய இயலாத குறுகிய பாதைக்குள் இயக்கி சிக்க வைத்திருக்கின்றார்.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

ஓட்ட தெரியாமல் காரை நுழைத்திருப்பாரோ என பலரால் யூகிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவை வைத்து பார்க்கையில் நன்கு ஓட்ட தெரிந்தவர் என்பதே தெரிய வருகின்றது. மேலும், பாதை மிகவும் குறுகலானது என தெரிந்தே அவர் சூப்பர் காரை சந்திற்குள் எடுத்துச் சென்றிருக்கின்றார் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

ஆகையால், சூப்பர் கார் பிரியர்கள் சிலர் ரோமா கார் உரிமையாரின் செயலைக் கண்டு கொதிப்படையத் தொடங்கியிருக்கின்றனர். இருப்பினும், எதற்காக இந்த விபரீத முயற்சியில் அவர் ஈடுபட்டார் என்பது பற்றிய தகவல் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், சம்பவம்குறித்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

ஃபெர்ராரி ரோமா சூப்பர் கார் 183.3 அங்குலம் நீளம் கொண்ட கார் ஆகும். இதன் அகலம் 77.7 அங்குலம், இதன் எடை 1,472 கிலோ ஆகும். இத்தகைய பரப்பளவு மற்றும் எடைக் கொண்ட சூப்பர் காரையே அதன் உரிமையாளர் நுழையவே முடியாத ஓர் குறுகிய பாதைக்குள் எடுத்துச் சென்று சிக்கியிருக்கின்றார்.

காரை திரும்ப வெளியேக் கொண்டு வர முடியாமல் அவரும் திணறும் காட்சிகள் வேதனையில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. கார் இருக்கும் நிலையை வைத்து பார்க்கையில் ஸ்கிராட் மற்றும் சொட்டைகள் பல அக்காரில் ஏற்பட்டிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. நிச்சயம் அவற்றை செலவு செய்ய பல லட்சங்கள் ஆகும்.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

இந்தியாவில் ஃபெர்ராரி ரோமா கார் ரூ. 3.76 கோடி என்ற மிக உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மிக சமீபத்திலேயே இக்காரை பேன் இந்தியா திட்டத்தின்கீழ் ஃபெர்ராரி நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

இந்த காரில் 4.0 லிட்டர் டர்போசார்ஜடு வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினையே தனது 488 பிஸ்தா சூப்பர் கார்களில் ஃபெர்ராரி நிறுவனம் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் 7,500 ஆர்பிஎம்மில் 603 பிஎச்பியையும், 5,750 ஆர்பிஎம்மில் 760 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

ஃபெர்ராரி ரோமா சூப்பர் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ வேகம் ஆகும். இதைவிட இக்காரின் மற்றுமொரு சிறப்பு வசதி என்னவென்றால், வெறும் 3.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு நூறு கிமீ எனும் வேகத்தைத் தொட்டுவிடும் என்பதே ஆகும். இத்தகைய சூப்பர் மற்றும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட காரே குறுகிய சந்திற்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

சூப்பர் கார் குறுகிய சந்திற்குள் சிக்கியது குறித்த வீடியோவை சூப்பர் கார் நியூஸ் (Super car News) எனும் யுட்யூப் சேனல் அதன் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது. இது ஓர் சூப்பர் கார்கள் குறித்த பிரத்யேக வீடியோக்களை வெளியிடும் சேனல் ஆகும். இதன் வாயிலாகவே சமூக வலைதளங்களில் ரோமா கார் குறித்த வீடியோவை வைரலாகி வருகின்றது.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

சூப்பர் கார் பயனர்கள் இதுபோன்று வீண் முயற்சிகளை மேற்கொண்டு சிக்கலில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் பல உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மழை வெள்ளம் நிறைந்த பாதையில் பயணிப்பது, சாலையில் அதி வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவது மற்றும் தேவையற்ற ஸ்டண்டில் ஈடுபட்டு எஞ்ஜினை பாழாக்குவது போன்ற பல்வேறு சம்பவங்களை சூப்பர் உரிமையாளர்கள் இதற்கு முன்னாடி செய்திருக்கின்றனர்.

சந்துக்குள் சொருகிய 3.75 கோடி ரூபா கார்... தெரிஞ்சேதான் உள்ள கொண்டு போனராம்! வைரல் வீடியோவால் காண்டான சூப்பர் கார் பிரியர்கள்!!

அந்தவகையிலேயே இத்தாலியில் அரங்கேறியிருக்கும் தற்போதைய சம்பவமும் அமைந்துள்ளது. இந்நிகழ்வு சூப்பர் கார் பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ferrari roma stuck in a narrow street here is a video
Story first published: Thursday, August 12, 2021, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X