இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

டெஸ்லா இந்திய சந்தைக்குள் நுழைவதற்கு பல வருடங்களாக முயற்சித்து வருவது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஏனெனில் பலர் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ இந்திய அறிமுகத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

ஆனால் சிலரோ வெளிநாட்டு டீலர்ஷிப்பில் டெஸ்லா காரை வாங்கி அதனை இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். இதற்கு நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் செலவு அதிகமாகும்.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

இதனாலேயே இவ்வாறான வழிகளில் டெஸ்லா கார்களை வாங்கி பயன்படுத்துபவர்கள் அம்பானி குடும்பத்தினர் போன்ற பில்லியனர்களாகவே இருக்கின்றனர். இருப்பினும் இந்தியாவில் டெஸ்லாவின் மாடல் 3 எலக்ட்ரிக் காரை பயன்படுத்துபவர் யாரும் இல்லை.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

இந்த நிலையில் இந்தியாவில் முதல் டெஸ்லா மாடல் 3 கார் இரத்தத்தின் பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் வந்திறங்கியுள்ளது. ஆட்டோமொபைலி அர்டெண்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த இந்தியாவின் முதல் டெஸ்லா மாடல் 3 கார் குறித்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

இருப்பினும் இந்த மாடல் 3 எலக்ட்ரிக் காரின் உரிமையாளர் யார் என்பது உள்ளிட்ட விபரங்கள் கிடைக்க பெறவில்லை. இந்த இன்ஸ்டாகிராம் படங்களில் இந்த சிவப்பு நிற டெஸ்லா காருக்கு அருகில் பெண்ட்லீ மல்சேனே வெப் நூற்றாண்டு எடிசன் மற்றும் போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் போன்ற அதிக விலை கொண்ட லக்சரி கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

இதனால் இந்த முதல் இந்திய டெஸ்லா மாடல் 3 கார் பெங்களூரை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்கே சொந்தமாகியிருக்க வேண்டும். இந்திய சந்தையில் நுழைந்ததும் அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள மாடல்களில் மாடல் 3-யும் ஒன்றாகும்.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

ஏனெனில் மறைப்புகளுடன் சமீப காலமாக டெஸ்லா மாடல் 3 கார் நம் நாட்டு சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்யும் கார்களிலேயே மாடல் 3 எலக்ட்ரிக் கார் தான் மலிவானதாக விளங்குகிறது.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

இதன் விலை அங்கு 39,990 அமெரிக்க டாலர்களாக உள்ளன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 30 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்படும் வரிகள் எல்லாம் சேர்த்தால், இந்த டெஸ்லா காரை கிட்டத்தட்ட ரூ.70- 80 லட்சத்திலேயே இந்திய உரிமையாளர் வாங்கி இருக்க வேண்டும்.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

பின் சக்கரங்கள் மூலமாக இயங்கும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் ரேஞ்ச் 423கிமீ ஆக உள்ளது. இந்த டெஸ்லா கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. அதேநேரம் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் இரட்டை-எலக்ட்ரிக் மோட்டார் தேர்விலும் விற்பனை செய்யப்படுகிறது. இரு மோட்டர்களுடன் மாடல் 3 காரின் ரேஞ்ச் 568கிமீ ஆகும்.

இதுதான் இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் டெஸ்லா மாடல் 3 காராகும்!! உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை

ரேஞ்ச் என்பது 100% பேட்டரி சார்ஜில் இருந்து 0% வரையில் கார் இயங்கும் தொலைவாகும். இந்த வேரியண்ட்களில் மணிக்கு 100கிமீ வேகத்தை இன்னும் விரைவாக 4.5 வினாடிகளில் எட்டிவிட இயலும். இதனை காட்டிலும் 3 வினாடிகளில் 100kmph வேகத்தை எட்டக்கூடிய மாடல் வெறும் 3 காரின் வேரியண்ட்களும் உள்ளன.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model 3 India’s first car arrives in blood red colour.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X