புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய பஞ்ச் காரை வெளியீடு செய்திருந்தது. அதனை தொடர்ந்து மைக்ரோ-எஸ்யூவி காராக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலைகள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

ப்யூர், அட்வென்ச்சர், அக்கம்ப்லிஷ்டு மற்றும் கிரியேட்டிவ் என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் டாடா பஞ்ச் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இணையத்தில் நாம் பார்க்கும் பெரும்பாலான பஞ்ச் கார்கள் அதன் டாப் வேரியண்ட்களே. அதனால் நாம் இந்த செய்தியில் இந்த புதிய டாடா காரின் விலை குறைவான ப்யூர் வேரியண்ட்டை பற்றி பார்க்கலாம்.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

Image Courtesy: A2Y cardrive

ஏ2ஒய் கார்ட்ரைவ் என்ற யுடியூப் சேனல் மூலமாக பஞ்ச் ப்யூர் காரின் படங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த படங்கள் ஆரம்ப விலை கொண்ட பஞ்ச் காரின் வெளிபுறம் மற்றும் உட்புறத்தை காட்டுகின்றன. பஞ்ச் ப்யூர் வேரியண்ட்டில் வழங்கப்பட உள்ள அம்சங்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்துவிட்டது.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

மலிவான பஞ்ச் வேரியண்ட்டாக இருப்பினும், பக்கவாட்டில் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் சக்கர வளைவுகளுடன் கார் மிகவும் கம்பீரமாக காட்சியளிப்பதை கூறியே ஆக வேண்டும். இதன் 15-இன்ச் கருப்பு நிற இரும்பு சக்கரங்களில் 185/70 ஆர்15 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த படங்களில் பஞ்ச் கார் டேடோனா க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

புதிய டாடா பஞ்ச் காரின் ப்யூர் வேரியண்ட்டை வெள்ளை நிறத்திலும் பெறலாம். இதன் முன்பக்கம் டாடா ஹெரியர் எஸ்யூவி காரில் இருந்து அப்படியே சிறியதாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் முக்கியமான ஹெட்லேம்ப்கள் பம்பரின் மேலே வழங்கப்பட்டுள்ளன. பஞ்ச் மாடலின் மற்ற வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட்டில் இல்லை.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

அதற்கு பதிலாக எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் காரின் முன்பக்கத்தில் பிரோஜெக்டர் செட்அப்-பும் இல்லை, ஃபாக் விளக்குகளும் இல்லை. வெள்ளை நிற பெயிண்ட் தேர்விலும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ள, பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் இந்த மலிவான வேரியண்டிலும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

வெளிப்புற கதவு கைப்பிடிகள் இந்த வேரியண்ட்டில் கருப்பு நிறத்தில் வழங்கப்படும். வெளிப்புறத்தில் க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் இந்த குறிப்பிட்ட பஞ்ச் காரின் உள்ளே வெள்ளை நிறத்தை டேஸ்போர்டிலும், டோர் பேட்களிலும் பார்க்க முடிகிறது. உட்புறத்தில் நமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய விஷயமாக எது இருக்கும் என்றால், இன்ஃபோடெயின்மெண்ட் திரை இல்லாதது.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய மலிவான காராகவே கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் இது ஆரம்ப நிலை வேரியண்ட், ஆதலால் இந்த வேரியண்ட்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்காதீர்கள் என்கிறது, டாடா மோட்டார்ஸ். ஏசி உள்ளது, ஆனால் அதனை நாம் தான் மேனுவலாக கண்ட்ரோல் செய்ய வேண்டும்.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

இந்த பஞ்ச் ப்யூர் காரில் வழங்கப்பட்டிருப்பது பல-செயல்பாடுகள் கொண்ட ஸ்டேரிங் சக்கரம் அல்ல. கியர் க்னாப் எந்தவொரு க்ரோம் தொடுதல்களும் இல்லாமல் மிகவும் எளிமையானதாக உள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டிஜிட்டல் தரத்தில் இல்லை. இரட்டை-பேட் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தான் வழங்கப்பட்டுள்ளது.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

இது இடதுபக்கத்தில் டச்சோமீட்டரையும், வலதுபக்கத்தில் வேகமானியையும் இவற்றிற்கு மத்தியில் சிறிய திரை ஒன்றையும் கொண்டுள்ளது. காரின் வெப்பத்தில் இருந்து பொருட்களை பாதுகாத்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் அலமாரி இந்த காரின் கேபினில் இல்லை. சாதாரண அலமாரியே கொடுக்கப்பட்டுள்ளது. அதனுள் விளக்கும் இல்லை.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

பின் இருக்கை பயணிகளுக்கு கை தலையணை வழங்கப்படவில்லை என்றாலும், தலைக்கான குஷின் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹெட்ரெஸ்ட் இருக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் பார்சல் ட்ரே வழங்கப்படவில்லை. அதேபோல் பாதுகாப்பு வசதிகளும் சற்று குறைவு தான்.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

ப்ரேக் ஸ்வே கண்ட்ரோல், EBD உடன் ABS, இரட்டை காற்றுப்பைகள், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டேரிங் ஸ்டெபிளிட்டி மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெறும் ப்யூர் வேரியண்ட்டை ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் உடன் பெற முடியாது. மேனுவல் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

புதிய டாடா பஞ்ச் காரின் மலிவான ப்யூர் வேரியண்ட்!! ரூ.5 லட்சத்திற்கு ஏற்ற கார் தானா?

இருப்பினும் சிட்டி, ஈக்கோ என்கிற இரு ட்ரைவிங் மோட்களை பெறும் இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை ப்யூர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.5 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Tata Punch base variant detailed in a walkaround images.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X