வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

மழை வெள்ளத்துல வாகனம் மூழ்கிடுச்சா, இந்த மாதிரியான நேரத்தில் என்ன மாதிரியான செயல்களைச் செய்ய வேண்டும்?, எதை செய்யக் கூடாது என்பது பற்றிய வழிமுறைகளை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

சென்னையை மட்டுமில்லைங்க தமிழகத்தின் பல்வேறு பகுதியை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், தமிழகத்தின் பிற பகுதியைக் காட்டிலும் கடலோர பகுதிகளான சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கலை இந்த பருவ மழை தலைகீழாக புரட்டி வருகின்றது.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

விவசாய நிலங்கள், அறுவடை செய்த நெல் மற்றும் வீடுகள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியிருக்கின்றன. இதேபோல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீரில் வாகனங்களும் மூழ்கிய நிலையில் காட்சியளிக்கின்றன. இத்தகைய வாகனங்களை எப்படி கையாள்வது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

வாகனம் நீரில் மூழ்கியதை கண்டறிந்த பிறகு உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

காரை உடனடியாக ரீ-ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பதை தவிர்க்கவும்

கார் முழுவதும் நீர் தேங்கியிருக்கின்ற காரணத்தினால் அதன் எஞ்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் கருவி உள்ளிட்டவை மழை நீரில் நிச்சயம் சேதமடைந்திருக்கும். அவற்றிற்குள் தண்ணீர் புகுந்திருக்கும் என்பதனால் அவை இயங்வது என்பது சாத்தியமற்றது. மேலும், மின்சார சாதனங்கள் ஷார்ட் சர்க்யூட் ஆகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் இதனை நீரில் மூழ்கிய வாகனத்தை உடனடியாக ரீஸ்டார்ட் செய்யக் கூடாது என்கின்றனர்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

இது வாகனத்தை மேலும் சேதமடையச் செய்யும். இதை மீறி வாகனத்தை மீண்டும் இயக்க முயற்சித்தால் ஹைட்ரோலாக் ஏற்படும். பிஸ்டன் இயங்கா நிலையையே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. இது பல மடங்கு அதிக செலவை ஏற்படுத்தும். சில நேரங்களில் காரை முற்றிலும் பயனற்றதாககூட மாற்றிவிடும்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

நீரை விரைவாக அகற்றுதல் வேண்டும்

கார் மூழ்கும் அளவிற்கு நீர் சூழ்ந்திருந்தால் அது லேசாக வற்றிய பின்னர் காரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். பாதுகாப்பான சூழல் இருக்குமானால் கார் மூழ்கியிருக்கின்ற அந்த வேலையிலேயே அங்கிருந்து வாகனத்தை அகற்றுவது மிகவும் சிறந்தது. இதன் பின்னர் உடனடியாக காருக்குள் புகுந்திருக்கும் நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

இது மேலும் வாகனம் பழுதடைவதைத் தவிர்க்க உதவும். நீரை விரைவில் வெளியேற்றும் வகையில் சந்தையில் பல்வேறு கருவிகள் மற்றும் துணிகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி வாகனத்தை பூஜ்ஜியம் ஈரப்பதம் என்றளவிற்கு சுத்தம் செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் வாயிலாக தேவையற்ற மின்சாதன செயலிழப்புகளைத் தவிர்க்க முடியும்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

காற்றோட்டமான இடத்தில் நிறுத்துங்கள்

வாகனத்தில் இருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிய பின்னர் அந்த வாகனத்தை காற்றோட்டமான இடத்தில் நிறுத்துவது மிக சிறந்தது. கண்ணுக்கு புலப்படாத இடங்களில் நீர் துளிகள் இருக்கக் கூடும். அவற்றை வெளியேற்ற இது உதவும். சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் அது கூடுதல் பலனை அளிக்கும்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

மழைக் காலங்களில் சூரிய ஒளி பற்றாக்குறை என்பதால் மின் விசிறி போன்றவற்றை பயன்படுத்தி காரை உலர வைக்கலாம். இவ்வாறு செய்வதனால் ஈரப்பதத்தினால் ஏற்படும் துர்நாற்றம், பூஞ்சை படிதல் மற்றும் பிற பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும். காரின் உட்பகுதியை ஹீட்டர்களைக் கொண்டு உலர்த்துவதன் மூலம் கூடுதல் நல்ல பலனை பெற முடியும். ஆனால், மிக அதிக சூடான நிலையில் உலர்த்துவதைத் தவிர்க்கவும்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

ஏன் இதை எல்லாம் செய்ய வேண்டும்? செய்ய தவறினால் என்னவாகும்?

மேலே கூறியதைப் போல ஹைட்ரோலாக் எனும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. இதைத் தவிர்க்க வேண்டுமானால் மழை நீர் தேங்கும் அல்லது வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். காற்று உட் கொள்ளும் துவாரங்கள் வாயிலாக மழை நீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிடுகின்றது. இதனால், பிஸ்டன்கள் மற்றும் சிலிண்டர்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

துரு

தற்போது சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதுமாதிரியான நேரங்களில் தொடர்ச்சியாக வாகனங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலை உருவாகின்றது. இது வாகனத்தை துருவிற்கு இரையாக்க வழி வகுக்கும். எனவே, நீரை முழுவதுமாக வெளியேற்றுவது முக்கியமானதாக இருக்கின்றது.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

செராமிக், டெஃப்லான் அல்லது பிபிஎஃப் ஆகியவை இதற்கு அதிகம் உதவுகின்றன. இந்த கோட்டிங்கை செய்வதன் வாயிலாக நீர் துளி மற்றும் வெயில் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். இது மறு விற்பனையின்போது நல்ல மதிப்பில் வாகனம் விற்பனையாகவும் உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

மின்சாதன சிக்கல்

மழை நீர் வாகனத்திற்குள் புகுவதால் ஏற்படும் மிகப் பெரிய சிக்கல்களில் இதுவும் ஒன்று. மின்சாதன சிக்கல் அல்லது மின்சாதன பழுது ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரேடியோ, இன்ஃபெடெயின்மென்ட், பவர் விண்டோ, மின் விளக்கு ஆகியவற்றை இது பாதிக்கும்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

பாதுகாப்பு பாகங்களில் ஏற்படும் சிக்கல்கள்:

மழை வெள்ள நீரில் மூழ்கும் வாகனங்களின் மின்சாதனங்கள் மட்டுமல்ல பிரேக், கிளட்ச் மற்றும் ஆக்சலரேட்டர் ஆகியவையும் பழுதாக நேரிடுகின்றது. இவையே பெரும்பாலும் மழையால் முதலில் பாதிக்கப்படுகின்றன. இத்துடன், ஸ்டார்டர், பிஸ்டன்கள் மற்றும் சிலிண்டர்கள் போன்ற பிற நகரும் பாகங்களும் வெள்ள நீரால் பாதிக்கப்படுகின்றன.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

வெள்ளத்தில் வாகனம் மூழ்கி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

படி 1:

காரோ அல்லது இருசக்கர வாகனமோ எந்த வாகனமாக இருந்தாலும் மழை நீரில் மூழ்கியிருந்தால் அதை தண்ணீரில் இருந்து மீட்ட பின்னர் உடனே ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். மாறாக, மெக்கானிக்கின் உதவியை நாடுவது மிக சிறந்தது.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

படி 2:

முழுமையாக வானிலை வழக்கமான நிலைக்கு திரும்பும் வரை பொருத்திருக்க வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். ஏற்கனவே மேலே கூறியதைப் போல் காருக்குள் இருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு, அதை உலர்வதற்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும்.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

படி 3:

இருக்கைகள் மற்றும் தரை விரிப்புகளை முழுவதுமாக அகற்றிவிட்டு உலர விடுவது மிக சிறந்தது. இது துரு மற்றும் பூஞ்சையால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவும். கேபினை சுத்தம செய்த கையோடு எஞ்ஜினையும் கவனிக்க வேண்டும். டிப் ஸ்டிக்கை பயன்படுத்தி ஆயிலுக்குள் நீர் புகுந்துள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். நீர் புகுந்திருந்தால் ஒட்டுமொத்த ஆயிலை வெளியேற்ற வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும், நீர் இருந்தால் காரை நிச்சயம் ஸ்டார்ட் செய்ய கூடாது. மெக்கானிக்கின் உதவியை நாடுவதே இந்த நிலையில் சிறந்தது.

வெள்ளத்துல வண்டி மூழ்கிடுச்சா? இதோ நீங்கள் செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை... காசு வீணாவதை தவிர்க்கலாம்!

படி 4:

காரின் பிற பாகங்கள் செயல்படுகின்றதா என்பதை பரிசோதிக்க வேண்டாம். குறிப்பாக, மின்சாதனங்களை உடனடியாக சோதிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் இது அந்த சாதனத்தை முழுமையாக சேதமடையச் செய்யும். இதுமாதிரியான சிக்கல்களைத் தவிர்க்கவே முழுமையாக தண்ணீரில் மூழ்கிய வாகனத்தை மெக்கானிக்கைக் கொண்டு பரிசோதித்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. நாம் தவறுதலாக செய்யும் எந்தவொரு காரியமும் புதிய காருக்கு இணையான செலவை வழங்க வழிவகுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Flood damaged vehicles here is what to do step by step guide
Story first published: Thursday, November 11, 2021, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X