சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அட்டர் பிளாப் ஆன ஒரு சில கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

உலகின் மிகப்பெரிய கார் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு அம்பாஸிடர், மாருதி 800 போன்ற பல்வேறு கார்கள் பிரம்மிக்கதக்க வெற்றியை பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் ஒரு சில கார்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மோசமான தோல்வியையும் சந்தித்துள்ளன. இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை அந்த கார்கள் ஈர்க்க தவறி விட்டன.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

இப்படி இந்திய சந்தையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார்களின் பட்டியலையும், அது குறித்த தகவல்களையும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த கார்கள் ஆரம்பத்தில் பெரும் வெற்றியை பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை தோல்வியை தழுவி விட்டன. சரி, வாருங்கள் இனி செய்திக்குள் செல்லலாம்.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

மஹிந்திரா க்வாண்ட்டோ (Mahindra Quanto)

மஹிந்திரா நிறுவனம் கம்பீரமான மற்றும் முரட்டுத்தனமான கார்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்றது. மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எஸ்யூவி கார்களை வாங்க முடிவு செய்பவர்களின் முதல் தேர்வே மஹிந்திராதான். ஆனால் மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றியை சந்தித்தது கிடையாது.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

ஒரு சில தோல்விகரமான தயாரிப்புகளும் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் மஹிந்திரா க்வாண்ட்டோ. இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 ஹெச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது.

ஆனாலும் இந்த கார் தோல்வியை தழுவியது. இதற்கு மோசமான டிசைனும், கவர்ச்சியாக இல்லாத பின் பக்க டிசைனும் முக்கியமான காரணங்களாக அமைந்து விட்டன. பின் பகுதியில் இரண்டு இருக்கைகளை வழங்குவதற்காக மத்திய வரிசையில் இடவசதியை மஹிந்திரா நிறுவனம் வீணடித்து விட்டது. இதன் காரணமாக இந்த கார் வாடிக்கையாளர்களை கவரவில்லை. இறுதியாக 2016ம் ஆண்டு இந்த கார் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டது.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

மிட்சுபிஷி சீடியா (Mitsubishi Cedia)

நிறைய வெற்றிகரமான கார்களை அறிமுகம் செய்த பெருமை மிட்சுபிஷி நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் இதில் சீடியா ஒன்றல்ல. மிட்சுபிஷி ஜேவி மற்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சிதான் சீடியா. இந்த காரில் 114 ஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

இந்தியாவில் மிகவும் அருமையான தோற்றம் கொண்ட டி-செக்மெண்ட் கார்களில் ஒன்றாக மிட்சுபிஷி சீடியா இருந்தது. ஆனால் குறைவான சர்வீஸ் ஸ்டேஷன்களும், விலை உயர்ந்த உதிரிபாகங்களும் இந்த காரை தோல்வியடைய செய்து விட்டன. மிகவும் குறைவான டிமாண்ட் காரணமாக இந்த காரின் விற்பனையை மிட்சுபிஷி நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு நிறுத்தி விட்டது.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

சுஸுகி கிஷாஷி (Suzuki Kizashi)

சுஸுகி நிறுவனம் கிஷாஷி கார் மூலம் இந்தியாவின் சொகுசு செடான் செக்மெண்ட்டில் நுழைய முயன்றது. ஆனால் பரிதாபகரமாக தோல்வியடைந்து விட்டது. இந்த கார் இந்தியாவிற்கு சிபியூ வழியில் வந்தது. அதாவது முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக அதிக விலையை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் சுஸுகி நிறுவனத்திற்கு இருந்தது.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

17 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையில் சுஸுகி கிஷாஷி விற்பனை செய்யப்பட்டது. இந்த அதிகப்படியான விலைதான் சுஸுகி கிஷாஷி காரின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்து விட்டது. நல்ல பிராண்டு நேம் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆகியவை இருந்தபோதும் சுஸுகி கிஷாஷி தோல்வியடைந்ததுதான் வருத்தமான விஷயம்.

இந்த காரில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த இன்ஜின் அதிகபட்சமாக 175.6 ஹெச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருந்தது. ஆனால் இந்த காரின் போட்டி மாடல்கள் மிகவும் குறைவான விலையில் கிடைத்தன. எனவே சுஸுகி கிஷாஷி காரால் சந்தையில் நீடிக்க முடியவில்லை. இந்திய சந்தைக்கு ஏற்ப சுஸுகி நிறுவனம் விலையை நிர்ணயம் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சரவெடியா வெடிக்கும்னு பாத்தா வெறும் புஸ்வானமா போயிருச்சு... இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன கார்கள்!

இன்னும் இருக்கு...

இதுதவிர ரோவர் மாண்டிகோ (Rover Montego), செவர்லே செயில் யூவி-ஏ (Chevrolet Sail UV-A), மஹிந்திரா வெரிட்டோ வைப் (Mahindra Verito Vibe) மற்றும் ஸ்டாண்டர்டு 2000 (Standard 2000) ஆகிய கார்களும் இந்திய சந்தையில் தோல்வியைதான் தழுவின. இந்த வகையில் உங்களுக்கு தெரிந்து தோல்வியை தழுவிய கார்களின் பெயர்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Flop cars in india mahindra quanto mitsubishi cedia suzuki kizashi
Story first published: Wednesday, December 22, 2021, 21:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X